சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 முறை தேர்தல் ஆணையர் உடன் சந்திப்பு.. மிட் நைட் மீட்டிங்.. திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த எச்சரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக திமுக உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவுரைகளை அவர் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் 4101 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 1934 , அதிமுக 1708, மற்றவை - 438 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் 453 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 238, அதிமுக 214 மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் இரண்டிலும் திமுகதான் தற்போது முன்னிலை வகிக்கிறது.

 ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக மாபெரும் முன்னிலை.. வேகமாக தொடரும் அதிமுக.. நிலவரம் என்ன? ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக மாபெரும் முன்னிலை.. வேகமாக தொடரும் அதிமுக.. நிலவரம் என்ன?

எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

இந்த தேர்தலை தொடக்கத்தில் இருந்தே சட்ட போராட்டம் மூலம் தடை வாங்கி நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் அவரின் சட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் இரண்டிலும் திமுக கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

முடிவு சிக்கல்

முடிவு சிக்கல்

ஆனால் திமுக வெற்றிபெற்றும் கூட, தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே நேற்று மாலை தமிழக தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து முறையிட்டார். பல இடங்களில் முறைகேடு நடப்பதாக அவர் குற்றச்சாட்டு வைத்தார்.

புகார் தந்தார்

புகார் தந்தார்

இதையடுத்து நேற்று நள்ளிரவில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்ற ஸ்டாலின், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கிறது. நிறைய ஊர்களில் ஆளும் கட்சியினர் அத்துமீறி செயல்பட்டு வருகிறார்கள்.

இதுதான் தொடக்கம்.. விழ விழ எழுந்து நிற்கும் நாம் தமிழர்.. தேர்தலில் மாஸ் செயல்பாடு.. மாபெரும் ஆதரவு!இதுதான் தொடக்கம்.. விழ விழ எழுந்து நிற்கும் நாம் தமிழர்.. தேர்தலில் மாஸ் செயல்பாடு.. மாபெரும் ஆதரவு!

நியாயம் இல்லை

நியாயம் இல்லை

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் நியாயமற்ற தன்மை நிகழ்ந்து வருகிறது. சில இடங்களில் திமுக வென்றாலும் கூட அங்கு முடிவுகளை அறிவிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தார். அதோடு விடாமல் நேற்று நள்ளிரவில் மீண்டும் இன்னொரு முறை அவர் தேர்தல் ஆணையரை சென்று சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலை

மீண்டும் நிலை

அதன்பின் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் முக்கியமான எம்எல்ஏக்கள், எம்பிக்களை சந்தித்தார். எல்லோரும் தங்கள் தொகுதிக்கு சென்று வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க சொன்னார். அதிமுக கட்சியினர் அத்து மீறி செயல்பட்டு வருகிறார்கள்.

கவனம்

கவனம்

அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் சென்று கவனம் செலுத்தினால் மட்டுமே முடிவுகளை நேர்மையாக அறிவிப்பார்கள் என்று அறிவுறுத்தி உள்ளார். இதனால் இன்று தேர்தல் களத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamilnadu Local body elections: DMK chief M K Stalin met Election Commissioner twice yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X