சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களை மீட்டதற்காக பிரதமருக்கு நன்றி சொன்ன எடப்பாடி பழனிசாமி... தமிழக அரசு பற்றி "ம்ஹூம்"!

Google Oneindia Tamil News

சென்னை: உக்ரைனிலிருந்து தமிழ்நாடு மாணவர்களை மீட்டு வந்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக மகத்தான வெற்றி..பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் வாழ்த்துபாஜக மகத்தான வெற்றி..பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இதனிடையே, உக்ரைனில் சிக்கி இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். 5,000-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் உக்ரைனில் சிக்கி இருப்பதாவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

 மாணவர்களை வரவேற்ற முதலமைச்சர்

மாணவர்களை வரவேற்ற முதலமைச்சர்

இதனை அடுத்து உக்ரைனிலிருந்து ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற தமிழக மாணவர்களும் பல்வேறு குழுக்களாக விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். இன்று உக்ரைனிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாடு மாணவர்களின் கடைசி குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.

 வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

அதன் பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை தொலைப்பேசியில் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றி

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றி

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில உக்ரைன் சென்ற அனைத்து மாணவர்களையும் குறிப்பாக தமிழக மாணவச்செல்வங்களை கடும் போர் சூழலில் இருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்
அவர்களுக்கும், தமிழக மாணவர்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

 தமிழ்நாடு அரசை கண்டுகொள்ளாத இபிஎஸ்

தமிழ்நாடு அரசை கண்டுகொள்ளாத இபிஎஸ்

தமிழ்நாடு மாணவர்களை மீட்க திமுக அரசு தனியாக குழுவை அமைத்து, உதவி எண்களை அறிவித்து தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்ததுடன் மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மாநில அரசை குறிப்பிடாமல் மத்திய அரசை மட்டும் வாழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu opposition leader Edappadi palanisamy thanked Prime minister Narendra modi and Union Foreign Minister Jaishankar for rescuing Tamil Nadu students stranded in Ukraine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X