சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நாளாக.. தினசரி கொரோனா கேஸ்களில்.. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம்.. 2 முக்கிய காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய கொரோனா கேஸ்களில் தமிழகம் உச்சத்தை தொட்டு வருகிறது. மகாராஷ்ட்டிரா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் சரிய தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் புதிய கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

மதுரையில் வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை - ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுரை மதுரையில் வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை - ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுரை

சென்னையில் ஓரளவு கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட மொத்தமாக தமிழகத்தில் பதிவாகும் புதிய கேஸ்களில் எண்ணிக்கை உயர்ந்தபடியேதான் இருக்கிறது.

என்ன

என்ன

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பதிவான கேஸ்களை விட நேற்று முதல்தான் தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் பதிவானது. நேற்று முதல்நாள் 33,059 கேஸ்கள் தமிழகத்தில் பதிவானது. இதுதான் அன்று இந்தியாவிலேயே அதிக கேஸ்கள் ஆகும். நேற்று தமிழகத்தில் 34875 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவும் இந்தியாவிலேயே அதிகம் ஆகும்.

நேற்று

நேற்று

நேற்று மகாராஷ்டிராவில் 34031 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் 32762 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கர்நாடகாவில் 34281 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் இதைவிட நேற்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2 நாட்களாக இப்படி தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்தபடி உள்ளது.

நிலவரம்

நிலவரம்

தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி 253576 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 1699225 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்ட நிலையில் 1426915 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 365 பேர் பலியான நிலையில் மொத்தமாக 18763 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

காரணம் 1

காரணம் 1

தமிழகத்தில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க முதல் காரணம் உள் மாவட்டங்களில் அதிகரிக்கும் கேஸ்கள் ஆகும். தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் தினசரி கேஸ்கள் 6300க்கும் கீழ் குறைந்துவிட்டாலும் அவ்வப்போது உயர்ந்து - குறைந்து பதிவாகி வருகிறது.

திருச்சி

திருச்சி

நெடு செங்கல்பட்டில் 2275 கேஸ்கள், சென்னையில் 6297 கேஸ்கள், கோவையில் 3250 கேஸ்கள், ஈரோட்டில் 1362 கேஸ்கள், மதுரையில் 1156 கேஸ்கள், திருவள்ளூரில் 1778 கேஸ்கள், திருப்பூரில் 1573 கேஸ்கள், திருச்சியில் 1459 கேஸ்கள் பதிவானது. உள்மாவட்டங்களில் இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ்கள் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

காரணம் 2

காரணம் 2

இது போக தமிழகத்தில் கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தினசரி மாதிரி சோதனைகள் 1.70 லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 170355 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. 162401 நபர்களுக்கு நேற்று சோதனை செய்யப்பட்டது. இப்படி தினசரி மாதிரி சோதனைகள் அதிகம் செய்யப்பட்டதும் கூட கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் ஆகும்.

ஆக்டிவ்

ஆக்டிவ்

தினசரி பதிவாகும் புதிய கேஸ்களில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும் ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. ஆக்டிவ் கேஸ்களின் அடிப்படையில்,

கர்நாடகா - 5,58,890

மகாராஷ்டிரா - 4,01,695

கேரளா - 3,31,864

தமிழ்நாடு - 253576

English summary
Tamilnadu records the highest number of Coronavirus cases for the past 2 days. Interior districts sees a huge number of surge in cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X