சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை "ஸ்வீப்" செய்கிறது திமுக.. 11-13 இடங்களில் மாஸ் வெற்றி.. ஏபிபி - சி வோட்டர் சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னையில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று பெருவாரியான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட தேர்தலுக்கு முந்தைய எல்லா கணிப்புகளும் திமுகவிற்கு ஆதரவாக இருந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் திமுகவிற்கு ஆதரவாக வந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்புகேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

திமுக

திமுக

ஏபிபி - சி வோட்டர் சர்வேவின் படி தமிழகத்தில் திமுக 160-172 இடங்களை வெல்லும். அதிமுக 58-70 இடங்களை பெறும். அமமுக- 0-2 இடங்களை பெறும். மநீம- 0-2 இடங்களை பெறும். இதர 0-3 இடங்களை பெறும்.

சென்னை

சென்னை

இதில் சென்னையில் திமுக மாபெரும் வெற்றியை பெறும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. சென்னை மண்டலத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் திமுக 11 முதல் 13 இடங்களைக் வெல்லும். சென்னையில் அதிமுக 3 முதல் 5 தொகுதிகளைப் வெல்லும். மற்ற கட்சிகள் எந்த இடத்திலும் வெல்லாது.

சென்னை வாக்கு சதவிகிதம்

சென்னை வாக்கு சதவிகிதம்

சென்னையில் சென்ற முறையை விட கூடுதலாக 2 இடங்களை திமுக வெல்கிறது. சென்னையில் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதம் திமுக வாக்கு சதவிகிதம் 40.6,, அதிமுக வாக்கு சதவிகிதம் 34.7. அமமுக வாக்கு சதவிகிதம் 3.8. நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்ற கட்சிகள் 20.9 சதவிகித வாக்குகளைக் பெறும்.

வாக்கு சதவிகிதம்

வாக்கு சதவிகிதம்

சென்னையில் இதன் மூலம் திமுக மாபெரும் வெற்றியை பதிவு செய்கிறது. மொத்தமாக தமிழகம் முழுக்க வாக்கு சதவிகிதத்தின் படி திமுக 46.70%; அதிமுக 35%; மநீம 4.10%; அமமுக 3.80%; இதர கட்சிகள் 10.40% வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

English summary
Tamilnadu State Assembly Elections Exit Poll: DMK will win 11-13 seats in Chennai says ABP C Voter survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X