சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

175- 195 இடங்களை.. அசால்டாக வெல்லும் திமுக.. இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா எக்சிட் போல் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி திமுக தமிழகத்தில் 175-195 இடங்கள் வரை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியான எல்லா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் திமுகவிற்கே வெற்றி என்று கூறி உள்ளன. சராசரியாக திமுக 160-170 இடங்கள் வரை வெல்லும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அதிமுக 60-70 இடங்கள் வரை வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி திமுக தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் அசுர பலத்துடன் வென்று ஆட்சியை தக்க வைக்கும் இடசாரிகள்.. இந்தியா டுடே கணிப்பு கேரளாவில் அசுர பலத்துடன் வென்று ஆட்சியை தக்க வைக்கும் இடசாரிகள்.. இந்தியா டுடே கணிப்பு

இடங்கள்

இடங்கள்

இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய கருத்து கணிப்பின்படி திமுக 175-195 இடங்களை வெல்லும். அதிமுக 38-54 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்கு சதவிகிதம்

வாக்கு சதவிகிதம்

இதில் வாக்கு சதவிகிதத்தின்படி திமுக 48% வாக்குகளை தமிழகத்தில் பெறும். அதிமுக 35% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் 4% வாக்குகளை பெறும், அமமுக 3% வாக்குகளை பெறும்.

 இந்தியா டுடே

இந்தியா டுடே

இந்த கணிப்பின்படி தமிழகத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெறும். ஆனாலும் எந்த இடத்திலும் வெற்றிபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

 முதல்வர்

முதல்வர்

இந்தியா டுடே- மை ஆக்சிஸ் கணிப்பின் படி தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று 46% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி 34%; கமல்ஹாசன் 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சி வாரியாக எத்தனை இடங்கள்

கட்சி வாரியாக எத்தனை இடங்கள்

அதிமுக 34 முதல் 46 இடங்களிலும் பாமக 2 முதல் 4 இடங்களிலும் பாஜக 2 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அது போல் திமுக 147 முதல் 161 இடங்களிலும் காங்கிரஸ் 16 முதல் 18 இடங்களிலும் இடதுசாரிகள் 9 முதல் 11 இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் 3 முதல் 5 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளது. அமமுக 1 முதல் 2 இடங்களிலும் தேமுதிக ஒரு இடத்திலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 2 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி 2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu State Assembly Elections Exit Poll: DMK will win 175-195 says India Today Axis My India survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X