சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலக் கல்வி கொள்கை..முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Recommended Video

    Tamil News June 15 | காலை முக்கியச்செய்திகள் | #NewsWrap

    சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    Tamilnadu state education policy committee meeting today

    தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான மும்மொழிக் கொள்கை, அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து, மாநிலத்தின் சொந்த கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    English summary
    The first consultative meeting of the committee set up to formulate state education policy takes place today. The panel is chaired by Chief Minister MK Stalin and chaired by Justice Murugesan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X