நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை(இன்று) மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமை தொகை, பொங்கல் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்படாதால் மக்கள் மத்தியில் சிறிதளவு அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? திமுக கொண்டு வந்த திட்டங்களின் பட்டியலை மக்கள் மனதில் எப்படி பதிய வைப்பது? என்பது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications