சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது! 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!! ரிசல்ட் எங்கே பார்க்கலாம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்லனர்.

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Tamilnau Plus one (+1) Results today

இத்தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதில் மாணவர்கள் 84.86%; மாணவிகள் 94.99% தேர்ச்சி இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் 95.56% தேர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம் 95.44% தேர்ச்சியுடன் 2-வது இடத்தையும்

மதுரை மாவட்டம் 95.25% தேர்ச்சியுடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இணைய தளங்கள்:

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடுசெய்து மதிப்பெண்களைப் பார்க்க முடியும்.

அதேநேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது பள்ளியில் தாங்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும்

English summary
Tamilnau Plus one (+1) Results to declare today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X