சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பண்பாடுதான் முக்கியம்.. பெண்பாடு முக்கியமல்ல.. தமிழிசை டிவீட்டால் சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டுள்ள டிவீட்டால் சர்ச்சை வெடித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலைக்குள் பெண்களை நுழைய விடாமல் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், பெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியம் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:

பண்பாடுதான் முக்கியம்

ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்......பண்பாடு.. பாதுகாக்கப்பட வேண்டும்.... அங்கு...பெண்பாடு முக்கியமில்லை... பழக்கப்பட்டுவரும்... பண்பாடுதான் முக்கியம்... இது மூடநம்பிக்கையல்ல...முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய.. நம்பிக்கையல்ல... தீர்க்கமான.. தீவிரமான நம்பிக்கை என்று தமிழிசை கூறியுள்ளார். இதற்கு பலரும் பதிலளித்து வருகின்றனர்.

அப்படியானால் உடன்கட்டை

பெண்பாடு முக்கியமல்ல, பண்பாடுதான் முக்கியமெனில் உடன்கட்டை ஏறுதலும் முன்னர் பண்பாடு தானே? அப்படியானால் அதையும் ஆதரிப்போம்!

தலித் பூசாரி இல்லையே ஏன்

சதி கூட 2000 ஆண்டு பழக்கம், அதை ஏன் விட்டிங்க? உயர் ஜாதி காரர்கள் முன் மேலாடை அணிந்து கொள்ள நமக்கு அதிகரம் இல்லை என்பதும் பண்பாடாக தான் கருதப்பட்டது. இன்றும் சபரிமலை எல்லாருக்கும் பொதுவானால் ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கு பூஜாரியாக இல்லை?

மேலாடை தடை சரியா

குறிப்பிட்ட சாதி பெண்களை மாராப்பு போடாமல் தடுத்தார்களே அதே நிலை பண்பாடு என தொடர்ந்திருந்தால் பல தாய்மார்கள் தற்ப்போது ஊடகங்களின் முன் பேட்டி கொடுக்க முடியுமா அன்பு சகோதரியாரே.

English summary
Tamil Nadu BJP president Dr Tamilsai Soundararajan's tweet on Sabarimalai has created debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X