TCS Layoffs: TCS-யில் 30,000 ஊழியர்கள் பணி நீக்கம்? சென்னையில் ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் - பரபரப்பு
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சென்னை திருவான்மியூரில் ஐடி ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்பதால் அரசு நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்தும் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்கு டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஐடி ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை திருவான்மியூரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
UNITE(Union of IT & ITES Employees) எனும் ஐடி ஊழியர்கள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு சிஐடியூ அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தின்போது ஐடி ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த ஜனனி என்பவர் கூறுகையில், ‛‛டிசிஎஸ் மூத்த மற்றும் நிர்வாக மட்டங்களில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் முடிவில் கிட்டத்தட்ட 30,000 முதல் 40,000 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும்'' என்றார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‛‛அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நீக்கிவிட்டு புதியவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். 80 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை குறைந்த ஊதியத்தில் இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களின் திறன்களை மேம்படுத்தி பணியில் தக்க வைத்து கொள்ள வேண்டும்'' என்றார்.
சிஐடியூ சார்பில், ‛‛டிசிஎஸ் விவகாரத்தில் அரசு நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான ஊழியர்கள் பணி நீக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் வேலையிழப்பு மட்டுமில்லை. பலபேரின் வாழ்வாதாரம். எனவே அரசு தலையீடு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டிசிஎஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது. நிறுவனத்தில் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். பணி நீக்க நடவடிக்கை என்பது 2 சதவீதத்துக்கு மேல் இருக்காது. கிளவுட், ஏஐ, டிஜிட்டல் நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்க எதிர்காலத்தில் செயல்படும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஏராளமானவர்கள் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ் தற்போது 12 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் பணி நீக்க நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று ஐடி ஊழியர்கள் அங்சுகின்றனர். இதுபற்றி நிபுணர்கள்கூறுகைியல், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஐடி ஊழியர்கள் அதிகம் பணியிழப்பார்கள். 3 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் பேர் ஐடி துறையில் பணியை இழக்கலாம் என்று வார்னிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications