விஜய் எடுத்த முடிவு சரியில்லை.. பிரஷர் போடும் டெல்லி! நேரில் சந்திக்கும் டாப் லாயர்.. என்ன நடக்குது?
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது டெல்லியை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, மற்றும் பாஜகவுடன் இணைந்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருந்து விலகும் வகையில் இந்த முடிவை தமிழக வெற்றிக் கழகம் (TVK) எடுத்துள்ளதாக தோன்றுகிறது.
விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, டெல்லியில் உள்ள சில முக்கிய அரசியல் தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் திமுகவை எதிர்த்து வலுவான மும்முனை கூட்டணியை உருவாக்க சில டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் விஜய்யின் உறுதியான மறுப்பு அவர்களை ஏமாற்றமடையச் செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஏமாற்றம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள.. தனியாக கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தேர்தல் நேரத்தில் மாறலாம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதம் இருக்கிறது. அதற்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இப்போதைக்கு விஜய் தனியாக இருக்கிறார். ஏனென்றால் அவரின் கட்சியில் கூட்டணி எதுவும் இல்லை. இப்போதைக்கு அதிமுக கூட்டணியும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்.
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் விஜய் தலைமையிலான கூட்டணியை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனென்றால் என்.டி.ஏவின் கூட்டணியின் தலைவராக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டுவிட்டார். இதனால் எடப்பாடி - விஜய் கூட்டணி நடக்க வாய்ப்பு குறைவு.
வலுவான கூட்டணி
ஆனால் டெல்லி தலைவர்கள், ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணி திமுகவின் ஆதிக்கத்திற்கு கடும் சவாலாக அமையும் என்று நம்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயுடன் டெல்லியை சேர்ந்த பிரபல தமிழ்நாட்டு வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனைகளை செய்து வருகிறாராம். விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், TVK எந்தக் கூட்டணியுடனும் இணையாமல் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். 2026 அல்ல, 2031-ஐ தனது உண்மையான அரசியல் இலக்காகக் கொண்டு, கட்சியின் நீண்டகால பலத்தை உருவாக்குவதே விஜய்யின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலைப்பாடு, தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக டெல்லி தலைமை கருதுகிறது. விஜய்யின் முடிவை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை சில தலைவர்கள் பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வெளியாகவில்லை.
நெருக்கடி
விஜய்க்கு சில வகைகளில் நெருக்கடி கொடுக்க டெல்லி தலைகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறதாம். தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, டெல்லி தலைவர்கள் தமிழக வெற்றி கழக (TVK) நிறுவனர் விஜய்யுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விஜய்யை துணை முதல்வர் வேட்பாளராக நிலைநிறுத்தும் வகையில் ஏற்பாடுகளை பாஜக டெல்லி தரப்பு செய்யத் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக கையாளப்பட்டதாகவும், விஜய்க்கும் டெல்லியின் முக்கிய அரசியல்வாதிகளுக்கும் இடையே நேரடி சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வழக்கறிஞர் மட்டுமே விஜயை சந்தித்து வருகிறாராம். தேசிய அரசியல் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த வழக்கறிஞர், கூட்டணி அமைந்தாலும் விஜய் தனது தனித்துவமான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியளித்தார். ஆனால் விஜய் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
-
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி










Click it and Unblock the Notifications