புழல் சிறையில் பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது. அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, தேசத் தலைவர்களை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

இந்த நிலையில் இன்று காலையில் பிலால் மாலிக் சக கைதிகளுடன் சிறை வளாகத்தில் இருந்தார். அப்போது அங்கு இருந்த சாரைப் பாம்பு ஒன்று பிலால் மாலிக்கை கடித்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சக கைதிகள் ஒன்று சேர்ந்து அந்த சாரைப் பாம்பை அடித்துக் கொன்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதி பிலால் மாலிக்க்கு சிறையில் முதலுதவி சிகிச்சை கொள்ளப்பட்டது.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதோடு, தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பிலால் மாலிக் பயங்கரவாதி என்பதால் அவர் சிகிச்சை பெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கைதியை பாம்பு கடித்ததால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications