17 ஆண்டுகளுக்கு முன்பே தங்க மோதிரம்! இதுலயும் திமுகதான் முன்னோடி! போட்டோ போட்ட மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு முன்பே 2009ஆம் ஆண்டு அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பே தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை திமுக தொடங்கி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009 ஆண்டு தொடங்பட்டது.

chennai ma subramanian

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 86-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சியால் தூய தமிழ்ப் பெயர்களை ஊக்குவிக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1 கிராம் தங்க மோதிரம்

சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழில் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அன்றைய துணை முதல்வர் ஸ்டாலினால் , நான் மேயராக இருந்த போது இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டது.

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவமனைப் பிரசவங்களை அதிகரிப்பதுமான நோக்கதோடு வெற்றிகரமாக சற்றொப்ப 17 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கி நடைமுறைப்படுத்தியது திராவிட மாடல் மாநகராட்சி நிர்வாகம் தான் என்பதை எண்ணி பெருமை கொள்வோம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்ட மா.சு.

இதற்கு ஆதாரமாக ஒரு குழந்தைக்கு மோதிரம் போடும் புகைப்படத்தை, அதற்கான செய்தியையும் தனது சமூகவலைதள பக்கத்தில் இணைத்துள்ளார்.

தவெகவின் தேர்தல் அறிக்கையான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

நகைக் கடைகள்

இதையடுத்து மோதிரங்களை செய்து தருவதற்கான டெண்டருக்கு முன்னணி நகைக் கடை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதில் தங்க மோதிரத்தை குறைந்த விலைக்கு கொடுப்பதாக quote செய்த ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு முறையே 70 சதவீதம், 30 சதவீதம் என்ற கணக்கில் டெண்டர் வழங்கப்பட்டது.

எத்தனை மோதிரங்கள்

ஜூன் 22 ஆம் தேதி முதல், பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவர். இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை இரு நிறுவனங்களும் செய்து கொடுத்தன.

chennai ma subramanian

ராஜாஜி மருத்துவமனை

இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மூன்று மதங்களை சேர்ந்த தாய்மார்களை மேடைக்கு அழைத்து அவர்களை நாற்காலியில் அமர வைத்த விஜய், முட்டி போட்டபடியே குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். மேலும் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார்.

பிறகு மற்ற பயனாளிகளுக்கு மேடையில் இருந்து இறங்கி போய் ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். இதனால் தாய்மார்கள் மகிழ்ந்தனர். பலர் உணர்ச்சிமிகுதியாக கண் கலங்கினர். அவரை விஜய் கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்தினார்.

232 தொகுதிகளிலும் திட்டம் தொடக்கம்

விஜய் மதுரையில் இந்த நிகழ்வை தொடங்கி வைத்த பிறகு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிளை தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மற்ற இடங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தங்க மோதிரம் 22 கேரட் தரம் என்றும் அழகான கலைநயத்துடன் செய்யப்பட்ட டிசைன் என்றும் சொல்லப்படுகிறது.

ஆர்சிஎச் எண்

ஒவ்வொரு மோதிரத்திலும் தாயின் ஆர்சிஎச் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா மோதிரங்களும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்தாலும் ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனி அடையாள எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+