சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பாராத திருப்பம்.. இந்த இடத்தில் திமுகவா.. அங்கே அதிமுகவா... எகிறும் கொங்கு களம்!

Google Oneindia Tamil News

சென்னை: தந்தி டிவி நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது. அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நாம் தற்போது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 11 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றி பெறப்போகிறது என்பதை இப்போது பார்ப்போம்.,

தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தந்திடிவி இதுவரை வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் திமுகவே ரேஸில் முந்தியுள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.,

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அவினாசி, பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு தந்திடிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. மடத்துக்குளம் நிலவரம் தெரியவில்லை.

அவினசாசி நிலவரம்

அவினசாசி நிலவரம்

இதில் சட்டசபை சபாநாயகர் தனபால் போட்டியிடம் அவினாசி அதிமுக முன்னிலையில் உள்ளது. இதேபோல் பல்லடம், திருப்பூர் வடக்கு உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதேநேரம் திமுகவை பொறுத்தவரை திருப்பூர் தெற்கில் மட்டும் முன்னிலையில் உள்ளது.

பல்லடம்-அவினாசி

பல்லடம்-அவினாசி

தொகுதிவாரியாக வாக்கு சதவீத விகிதத்தைஇப்போது பார்ப்போம். அவினாசி தொகுதியில் அதிமுக 46%-52% ; திமுக 42%-48%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4%; மநீம 1%-4% பெற வாய்ப்பு உள்ளது. பல்லடம் தொகுதியில் அதிமுக 43%-49% ; மதிமுக 40%-46%; மநீம 4% - 7%; நாம் தமிழர் 3%-6% என ஆதரவு உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

திருப்பூர் வடக்கில் அதிமுக

திருப்பூர் வடக்கில் அதிமுக

திருப்பூர் தெற்கு: திமுக 40%-46%; அதிமுக 38%-44% ; மநீம 6% - 12%; அமமுக 3%-6%; நாம் தமிழர் 3%-6% என ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக 43%-49% ; இந்திய கம்யூனிஸ்ட் 40%-46%; மநீம 6% - 9%; நாம் தமிழர் 3%-6% ; தேமுதிக 1%-4% ஆதரவை பெற்றுள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பு கூறுகிறது. உடுமலைப்பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அங்கு அதிமுக 44%- 50% ஆதரவை பெற்று ரேஸில் முந்துகிறது. காங்கிரஸ் 42%-48%; மநீம 3%-6%; நாம் தமிழர் 2%-5%; அமமுக 2%-5% என ஆதரவை பெற்றுள்ளன.

தட்டி தூக்கும் திமுக

தட்டி தூக்கும் திமுக

இப்போது ஈரோடு மாவட்ட நிலவரத்தை பார்ப்போம். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு ஆகிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ரேஸில் முந்துகின்றன. அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டி பாளையத்தில் மட்டும் முன்னிலையில உள்ளது.

பவானிசாகர்

பவானிசாகர்

தொகுதிவாரியாக நிலவரத்தைப் பார்ப்போம். அந்தியூர் தொகுதி நிலவரம்: திமுக 45%-51% ; அதிமுக 40%-46%; சமக 3%-6%; நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5% என ஆதரவு உள்ளது. பவானிசாகர் தொகுதியில் இ.கம்யூ 46%-52%; அதிமுக 41%-47%; நாம் தமிழர் 3%-6%; மநீம
2%-5%; தேமுதிக 1%-4% என ஆதரவுவை பெற்றுள்ளது.

அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி

அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக 46%- 52% ஆதரவை பெற்று முன்னிலையில் உள்து திமுக 41%-47% ஆதரவுடன் கடும் போட்டி தருகிறது. நாம் தமிழர் 3%-6%; அமமுக 2%-5%; மநீம 1%-4% ஆதரவை பெற்றுள்ளது. பெருந்துறையில் கொ.ம.தே.க. திமுக கூட்டணி 35%-41% ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 34%-40% ஆதரவையும், சுயேட்சையாக போட்டியிடும் (தோப்பு வெங்கடாசலம்) 14%- 20% ஆதரவையும பெற்றுள்ளாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் 3%-6%; மநீம 3%-6% ; தேமுதிக 1%-4% ஆதரவையும் பெற்றுள்ளதாக தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக வெற்றி உறுதி

திமுக வெற்றி உறுதி

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக 46%-52% ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 39%-45% ஆதரவையும், மநீம- 5%-8% ; நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5% ஆதரவையும் பெற்று அடுத்தடுத்து உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக 42%-48% ; அதிமுக 41%-47%; மநீம- 3%-6% ; நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5% என ஆதரவு உள்ளது.

English summary
Thanthi TV election survey 2021 Report that AIADMK to win 5 seats, DMK to win 6 seats in erode and thirupur districts. minister sengottaiyan and udumalai radhakrishnan likely win his constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X