Exit poll 2021: திமுக கூட்டணி 133 இடங்களில் வெல்லும்.. ஒன்றில் கூட பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
Recommended Video
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 5 முனை போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக களப்பணியாற்றியது. அதுபோல் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் போராடியது. எனினும் மக்கள் என்ன தீர்ப்பளித்துள்ளார்கள் என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும்.

விமர்சகர்
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் அரசியல் விமர்சகர்களின் பார்வையிலும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்றைய தினம் ஏபிபி சி வோட்டர், ரிபப்ளிக், தந்தி டிவி, இந்தியா டுடே, சாணக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தின.

திமுக கூட்டணி
அதில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 133 இடங்கலிலும் அதிமுக 68 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது போல் 33 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியிடையே போட்டி நிலவும்.

அதிமுக கூட்டணி
இந்த 33 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றாலும் 68+33= 101 தொகுதிகளே வருகிறது. எனவே அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அதிமுக மட்டும் 63 இடங்களில் வெல்லும். 22 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும்.

பாமக
அது போல் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 4 தொகுதிகளில் பாமக வெல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும். பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது ஒரு தொகுதிகளில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆனால் 4 இடங்களில் எதிரணிக்கு கடும் போட்டியாக இருக்கும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஒரு கொதுகியில் மட்டுமே வெல்ல வாய்ப்பு என்றும் மேலும் ஒரு தொகுதியயில் போட்டி நிலவும் என்றும் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications