சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை ஒட்டுமொத்தமாக அள்ளும் திமுக... மதுரையில் போட்டி தரும் அதிமுக... தந்தி டிவி சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தந்தி டிவி 50 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் அதில் திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், அதிமுக+ கூட்டணி 12 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

மறுபுறம் திமுகவும் காங்கிரஸ், இடதுசாரிகள். விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு செம ஷாக்... மாலை முரசு கருத்துக்கணிப்புகொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு செம ஷாக்... மாலை முரசு கருத்துக்கணிப்பு

தந்தி டிவி கருத்துக்கணிப்பு

தந்தி டிவி கருத்துக்கணிப்பு

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இன்று தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. முதல்கட்டமாக சுமார் 50 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தந்தி டிவி வெளியிட்டுள்ளது.

சென்னையில் தொடரும் திமுக ஆதிக்கம்

சென்னையில் தொடரும் திமுக ஆதிக்கம்

தாம்பரம், பூந்தமல்லி, வில்லிவாக்கம், அண்ணா நகர், தி. நகர், திரு.வி.க நகர், சைதாப்பேட்டை எனச் சென்னை மற்றும் நகரைச் சுற்றியுள்ள தொகுதிகளில் திமுகவே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பெரியகுளம், மதுரை கிழக்கு, ஆத்தூர் (திண்டுக்கல்), உதகை, ஆலந்தூர், பெரம்பூர், உசிலம்பட்டி தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும் தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை யாருக்கு?

மதுரை யாருக்கு?

மதுரை மத்தி, கம்பம், குளித்தலை, திருவண்ணாமலை தொகுதிகளில் திமுக வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர மதுரை வடக்கு, செஞ்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சுழி, தஞ்சை மொடக்குறிச்சி தொகுதிகளில் திமுக முன்னிலை பெறும் என்றும் தந்தி டிவி தெரிவித்துள்ளது. கீழ்பென்னாத்தூர், துறையூர், ஆம்பூர் தொகுதிகளையும் திமுக வெல்லும் என தந்தி டிவி குறிப்பிட்டுள்ளது. அதேபோல உதகை, உசிலம்பட்டி தளி, திருத்துறைப்பூண்டி, சிவகாசி, அறந்தாங்கி, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிகளை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னிலை

அதிமுக முன்னிலை

அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், சோழவந்தான், மதுரை தெற்கு தொகுதிகளில் அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாகத் தந்தி டிவி தெரிவித்துள்ளது. சிதம்பரம், பாலக்கோடு, தென்காசி, மேலூர், மதுரை மேற்கு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மேலும், நாகை, நிலக்கோட்டை, திண்டுக்கல் தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெறும் என்று தந்தி டிவி தெரிவித்துள்ளது,

34 தொகுதிகளில் திமுக முன்னிலை

34 தொகுதிகளில் திமுக முன்னிலை

மேலும், ஆலங்குளம், பூம்புகார், பட்டுக்கோட்டை, திருப்பரங்குன்றம் என 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகத் தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள 50 தொகுதிகளில் திமுக+ கூட்டணி 34 தொகுதிகளிலும் அதிமுக+ 12 தொகுதிகளிலும் வெல்லும் என தந்தி டிவி கூறியுள்ளது.

English summary
Thanthi tv opinion polls DMK leads in Chennai and Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X