ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ்.. ஆங்கிலத்தில் அசத்தல் பேச்சு.. சமூகநீதிதான் மூச்சு- திமுக பிரச்சார வீடியோ
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ், சோஷியல் ஜஸ்டிஸ் இஸ் அவர் குரல், வாட் லீட்ஸ் அஸ் இஸ் திருக்குறள் என்ற பாடல் வரிகளோடு திமுக வெளியிட்டுள்ள பிரச்சார பாடல் சமுக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருவதோடு வரவேற்பையும் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
தற்போது கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அதிமுக திமுக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக, மக்கள் நீதி மையம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் உள்ளூரில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பல கட்ட பிரச்சாரம் முயற்சிகளை வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். போஸ்டர்கள் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலமாக வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஸ்டாலின் தான் வாராரு பாடல்
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. திமுகவினரும் கூட்டணிக் கட்சிகளும் இந்த பாடலை கொண்டு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர் திரும்பிய பக்கமெல்லாம் இந்த பாடல்தான் எதிரொலித்தது. தேர்தலில் திமுக வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்டாலின்தான் வாராரு பாடல்.

புதிய பிரச்சார பாடல்
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நகர்ப்புற தேர்தலை ஒட்டி தமிழக முதல்வரும், மூத்த தலைவருமான ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசியது போல ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வழக்கம்போல இந்த வீடியோவுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயப் பின்னணியில் ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களோடு தொடங்கும் இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். கேட்டுக்கோ கேட்டுக்கோ இன் யுவர் ஏர் போட்டுக்கோ, திராவிடம் இஸ் நாட் ஆன் எமோசன், இட்ஸ் இஸ் அவர் ஒன்லி சொல்யூசன் என ஆங்கிலமும் தமிழும் கலந்து திரைப்பட பாடல் போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ்
அந்த வீடியோவில் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் பாடல் வரிகளுடன் டிஜிட்டலில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ ஆம் ஸ்டாலின் ப்ளானிங் டூ லாஞ்ச் ஆன் ஆல் இந்தியா பெடரேசன் ஃபார் சோசியல் ஜஸ்டின் என சரளமான ஆங்கிலத்தில் முதல்வர் ஸ்டாலின் அசத்தலாக உரையாற்றுகிறார். ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசிய வீடியோவை அடுத்தடுத்து எடிட் செய்து இந்த வீடியோவில் இணைத்து, ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ், சோஷியல் ஜஸ்டிஸ் இஸ் அவர் குரல், வாட் லீட்ஸ் அஸ் இஸ் திருக்குறள் என பஞ்ச்களுடன், மோடி அமித்ஷாவையும் வீடியோவில் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications