சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு கால புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு... ஏப்ரல் 20-ம் தேதி அமல்

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படும் தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

Recommended Video

    ஊரடங்கு கால புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு..ஏப்ரல் 20-ம் தேதி அமல்

    மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்காக அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி தரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    The Central Government has issued guidelines for curfew relaxation

    ஆனால் அதே வேளையில் வழிபாட்டுத் தளங்களை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும், கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகளுக்கு தடை நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் ஆட்டோ, வாடகை கார்களை இயக்க அனுமதியில்லை என்றும் மே 3 -ம் தேதி வரை தடை தொடரும் என அறிவித்துள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, பணியிடத்தில் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் எனவும் அதனை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வேளாண் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் உள்ளது.

    லாக்டவுனில் சலுகை ஓகே.. மே 3 வரை எதற்கெல்லாம் தடை தொடரும் தெரியுமா? இதோ லிஸ்ட் ஏப்.20-க்கு பிறகு எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சு வேலைகளை செய்யலாம் என்றும், ஆனால் சமூக விலகல் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைதொடரும் எனவும் மே 3-ம் தேதிக்கு பிறகே போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும் எனவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

    மேலும், ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு கட்டுமானப் பணிகளை தொடரலாம் என்றும், ஆனால் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே கட்டுமான ஊழியர்கள் தங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Central Government has issued guidelines for curfew relaxation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X