அண்டம் பற்றி விடை தெரியாத பல கேள்விகள் இருப்பதால் ஜோதிடத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது- ஹைகோர்ட்
சென்னை: ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அண்ட சராசரம் குறித்த பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இன்னும் விடை காண முடியாத நிலையில், ஜோதிடம் கூடாது என்று உத்தரவிட முடியாது என்றும் ஹைகோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஜோதிடம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விவரம் இதோ:

சென்னை ஹைகோர்ட்
ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்பதால் இது குறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கும், இஸ்ரோ அமைப்புக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பொது நல மனு
அந்த மனுவில்.., ஜோதிட மூட நம்பிக்கை, பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து விடுகிறது. அவர்களை குற்றவாளிகளாக்கிவிடுகிறது. போதை அடிமைகளாகவும் மாற்றி விடுகிறது. எனவே ஜோதிடம் குறித்து அரசும், இஸ்ரோவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி அமர்வு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாரட்டதக்கதாக இருந்தாலும், தனிநபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது.

விடை காண முடியாத கேள்விகள்
இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருக்கிறது. அண்ட சராசரம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளை களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை இருக்கிறது, எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications