சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல்.." மத்திய அரசின் புதிய ஐடி விதிக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை

Google Oneindia Tamil News

சென்னை: டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ,900 கோடி டெபாசிட்.. உற்சாகத்தில் பெற்றோர்.. திகைப்பில் வங்கி அதிகாரிகள்சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ,900 கோடி டெபாசிட்.. உற்சாகத்தில் பெற்றோர்.. திகைப்பில் வங்கி அதிகாரிகள்

 ஆன்லைன் செய்திகள்

ஆன்லைன் செய்திகள்

இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 தலைமை நீதிபதி அமர்வு

தலைமை நீதிபதி அமர்வு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அந்த உத்தரவு நாடுமுழுவத்ற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

ஊடகங்களை கண்காணிக்க முடிவு

ஊடகங்களை கண்காணிக்க முடிவு

மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என கூறும் நிலையில், விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் 9 வது பிரிவின் 3வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஊடகங்களின் சுதந்திரம் பறிப்பு

ஊடகங்களின் சுதந்திரம் பறிப்பு

இதையடுத்து, மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

English summary
The Chennai High Court has ordered an interim injunction against a new information technology rules 2021 that makes it possible for the central government to monitor digital media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X