அட.. டிசம்பர் மாதமே முடிய போகுது.. ரஜினி இனிமேலும் அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா?
நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதமாவது அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதமாவது அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி... என்ற நிலையில்தான் தற்போது ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை படம் ரிலீஸ் செய்து நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை வழங்கி வருகிறார்.
பேட்ட படமும் தற்போது பொங்கலுக்கு வெளியாக லைனில் காத்து இருக்கிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அறிவிப்பார் என்றார்
நடிகர் ரஜினி அவரது பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றுதான் கூறினார்கள். ஆனால் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவரது பிறந்த நாளும் பெரிய அளவில் சிறப்பாக இந்தமுறை நடத்தப்படவில்லை.

மாற்றம்
அதேபோல் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டில் கூட சிறிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதும் பாஜகவிற்கு ஆதரவாக பேசும் ரஜினி முதல்முறை பாஜகவிற்கு எதிராக பேசினார். 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பேசிய ரஜினி, பாஜகவின் வலிமை குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவும் அரசியல் அறிவிப்பு தாமதமாக காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தள்ளி போடுகிறாரா?
இதனால் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டுவிட்டாரா என்றும் கேள்வி எழுந்து இருக்கிறது. 12ம் தேதியே அவர் அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் பாஜகவின் தோல்வி காரணமாக ரஜினிகாந்த் பின்வாங்கிவிட்டாரா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ரஜினி உறுதியாக அரசியல் அறிவிப்பை அவர் பிறந்தநாளில் வெளியிடுவதாக கூறவில்லை என்றும் சிலர் அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

ரசிகர்கள் பாவம்
இதெல்லாம் சேர்ந்து ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்த்து அவர்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். இந்த மாதம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ரஜினி ஏதாவது அதிரடி பேட்டி அளித்து ரசிகர்களை குஷிப்படுத்துவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications