சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 18 ல் தமிழகத்திற்கு தேர்தல்… தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் இன்று இரவு காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

The date of the Lok Sabha elections for Tamil Nadu on April 18th

2019 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா ஆகியோர் வெளியிட்டனர்.

அப்போது பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் அவரோடு சேர்த்து சில 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகை வருவதுபோல தேர்தல் நடைமுறையும் பெரிதாகியுள்ளது.

லோக்சபா தேர்தல்.. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!லோக்சபா தேர்தல்.. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!

16 வது மக்களவை காண பதவி காலம் ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி தேர்வு தேதி, அறுவடை காலம், நோன்பு காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து தேர்தலை சுமுகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

8 கோடியே 43 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 கோடி ஆக உள்ளது என்றும் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள தேர்தல் நடத்தை விதிகளை மீறும் கட்சி வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

English summary
Lok Sabha Elections 2019 : Tamil Nadu Chief Electoral Officer urgent Meet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X