நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 2 கலெக்டர்களுக்கு விருது.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த மாவட்ட கலெக்டர்களாக நீலகிரி மற்றும் சிவகங்கை கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு கடந்த மாதம் 8-ம் தேதி தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது பின்வரும் நபர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்து
அரசு அவ்வாறே ஆணையிடுகிறது:-
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு திருச்சியைச் சேர்ந்த ஹோலி கிராஸ் சர்விஸ் சொசைட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மருத்துவர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications