'சென்னை நங்கநல்லூரில் வேலை செய்தவர் இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. யார் இந்த 'நித்யா ராமன்'?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நித்யா ராமன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராவதற்கு முன்பே சென்னை நங்கநல்லூர் பகுதியில் பொது மக்களுடன் இணைந்து களப்பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நித்யா ராமன் 2010-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் டிரான்ப்ரன்ட் சென்னை என்ற அமைப்பை உருவாக்கி, சென்னை மாநகரில் அமைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை , பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்களுடன் இணைந்து களப்பணியாற்றியவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராகப் பொறுப்பேற்க உள்ள நித்யா ராமன் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பணியாற்றி உள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் தரவுகள் அடிப்படையில் இந்தப் பணிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' என்ற ஒரு சமூக நலன் சார்ந்த நிறுவனத்தை தொடங்கி அதன் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார்.

Los Angeles mayor

'டிரான்ஸ்பரன்ட் சென்னை' அமைப்பு சென்னையில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IFMR) நிறுவனத்தின் வளர்ச்சி நிதி மையம் (CDF) அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. 2009, 2010-ஆம் ஆண்டுகளில் நித்யா ராமனின் டிரான்பரன்ட் சென்னை அமைப்பு நகர்ப்புற அடிப்படை வசதிகளை வரைபடமாகப் பதிவு செய்தல், பொதுமக்களுக்கு அதிகாரமளித்தல், நகர்ப்புற நிர்வாகத்துக்குத் தரவுகள் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருக்கிறது.

நித்யா ராமனும் அவரது குழுவினரும் நங்கநல்லூர் பகுதி மக்களுடனும், சமூக ஆர்வலர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்குமான பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்வதே அவரது நிறுவனத்தின் நோக்கமாக அந்த காலக்கட்டத்தில் இருந்துள்ளது. இதற்காக பொதுமக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் அப்போது இருந்த போக்குவரத்துப் பிரச்சினைகளை வரைபடமாக பதிவு செய்த நித்யா ராமன், பொதுப் போக்குவரத்து, பாதசாரிகளின் பாதுகாப்பு, நகர்ப்புற அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்த தரவுகளையும் தனது அமைப்பின் மூலம் சேகரித்தார். அப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களை சென்னை போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மாநகராட்சிகளிடம் சமர்ப்பித்து, நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்கியருக்கிறார்.

ஆங்கில ஊடகமாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு, தில்லை கங்கா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பில் செயல்பட்டவருமான சங்கரன் அளித்த பேட்டியில், நித்யா ராமன் 2010-ஆம் ஆண்டு நங்கநல்லூரில் உள்ள தங்கள் பகுதிக்கு வந்து போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ததை குறிப்பிட்டார். "அப்போது நித்யா ராமன் நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்தார். எங்கள் பகுதியில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார். உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் அரசியல்வாதியாகவும், ஒரு நகரத்தின் மேயராகவும் வருவார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் சென்னை மாநகரத்தின் வளர்ச்சியில் அவருக்கு நல்ல ஆர்வம் இருந்தது. எங்கள் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 குடியிருப்பாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்" என்றார். நித்யா ராமன் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக உள்ள நிலையில், சென்னையிலும், குறிப்பாக நங்கநல்லூர் பகுதியிலும் அவரது செயல்பாடுகள் தொலைநோக்கு சிந்தனையுடன் இருந்தது என்பது தெரியவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+