Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது யாருக்கான இந்தியா? சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும்.. சாமானியர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, மானியத்தை நிறுத்தியது, வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காதற்காக அபராதம் உள்ளிட்ட பிரச்சனைளை குறிப்பிட்டு ஒரு சாமானியரின் குமுறலை அப்படியே தெரிவிக்கிறோம்.

இந்த வருடத்தில் பட்ஜெட்டில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் இனி கூடுதலாக சிலிண்டருக்காக எடுத்து வைக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 ரூபாய் உயர்த்தியுள்ளன. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக விற்பனையாகிறது.

இன்று கேஸ் விலை

இன்று கேஸ் விலை

வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் ஆக இருந்தது. கடந்த 8 மாதத்தில் 215 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் முதல் தற்போது வரை ஓராண்டில் சுமார் 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒரு சிலிண்டர் 915 ரூபாய் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களை போன்ற ஏழைகளுக்கு பெரும் துயரத்தை தரும் முடிவு. எங்கள் வீட்டு அஞ்சரை பெட்டிகளில் சேர்த்து வைத்த காசுகள், விலை உயர்வுகளால் இப்போது காணாமல் போய்விட்டது. வெறும் சிலிண்டர் மட்டுமல்ல, பெட்ரோல் டீசலும் பெரும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது . இந்த பிரச்சனை தொடர்பாக அரசியல் கட்சிகள் வெற்று சம்பிரதாயத்திற்கு அறிக்கை மட்டும் விட்டுவிட்டு தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றன. எதிர்கட்சிகளோ, ஒரு நாள் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுஅத்துடன் கண்டுகொள்வது இல்லை.

ஏன் குறைக்கவில்லை

ஏன் குறைக்கவில்லை

சாமானியனின் ஒவ்வொரு ரூபாய் சம்பாத்தியத்திலும், எத்தனை பைசா அரசு வரியாக எடுக்கிறது. எத்தனை பைசாவை அவன் கையில் இருக்க அனுமதிக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க தயாராக உள்ளனவா? உண்மையில் பெட்ரோல் டீசல் விலை, கேஸ் விலை மற்றும் இந்தியாவில் வரி மிக அதிகம். சர்வதேச சந்தையில் விலை உயரும் விலையை ஏற்றித்தானே ஆக வேண்டும் என்று கூறும் அரசு, விலை குறைந்த போது, அதன் பலனை எங்களை போன்ற சமானிய மக்களுக்கு அளிக்காதது ஏன்? இதை பற்றி ஏன் கடுமையான குரலை எதிர்க்கட்சிகள் எழுப்புவது இல்லை. மக்களை பற்றி ஆளும் கட்சியும் கண்டுகொள்வது இல்லை.

மானியம் குறைப்பு

மானியம் குறைப்பு

இன்னொரு கேள்வி? ஏழைகளுக்கு கேஸ்.. ஏழைகளுக்கு வங்கி கணக்கு என அரசு கொண்டு வந்த திட்டத்தின் நோக்கம் என்ன? ஏழைகளுக்கு கேஸ் ஒரு முறை இலவசமாக அளித்த அரசு அதன்பிறகு தரவில்லை. மானியம் தருவதாக கூறி வங்கி கணக்கை திறக்க சொன்னதால் ஏராளமான மக்கள் வங்கி கணக்கை தொடங்கினார்கள். ஆனால் கொரோனாவிற்கு பிறகு மானியத்தை மிகமிக குறைத்துவிட்டார்கள். வெறும் 50 ரூபாய் என்கிற அளவில் மானியம் தரப்படுகிறது. மானியம் வாங்குவதற்காக திறந்த வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இல்லை என்று கூறி அபராதமும் விதிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம். இப்படி எங்களிடம் அபராதமாக வசூலித்த தொகை பல ஆயிரம் கோடி என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

ஜன்தன் கணக்கு தொடங்கியவர்களை தவிர மற்ற ஏழைகளுக்கு வங்கி கணக்கில் இருந்து அபராதம் விதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பக்கம் ஆயிரம் கொடுத்து கேஸ் வாங்க யாரால் முடியும். இருக்கும் ஆயிரத்திலும் அபராதம் என பறிப்பதையும் யாரால் ஏற்க முடியும். ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கால் எங்களுக்கு நிலையான வேலை இல்லை. மறுபக்கம் குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளின் வருமானம் பலமடங்கு கடந்த வருடம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோல் கார்ப்பரேட் வரியை அரசு குறைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கார்ப்பரேட்கள் வாங்கி கட்டாமல் விட்ட கடனை அடைக்க எங்கள் வரிப்பணத்தை செலவு செய்கிறது. எனவே இது யாருக்கான இந்தியா? என்ற கேள்வி எழுகிறது" என்று சாமனியர் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்,

நியாமில்லை

நியாமில்லை

இதனிடையே சமையல் எரிவாயு கேஸ்க்கான மானியம் நிறுத்தப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் இதுபற்றி கருத்து கேட்டோம். அவர் கூறும் போது, பொதுவாக ஒரு அரசாங்கம் என்பது துயரம் வரும் சமயங்களில் எல்லாம் மக்களுக்கு துணை நிற்கக்கூடியதாக இருக்கும். அது அவர்களின் கடமை. கொரோனா காலக்கட்டத்தில் இருந்து மக்கள் இப்போது தான் மீண்டு வருகிறார்கள். அரசு இந்த காலக்கட்டத்தில் கூடுதல் சலுகை கொடுக்காவிட்டாலும், இருக்கும் சலுகையை பறிப்பது என்பது நியாயமே இல்லை. சமையல் கேஸ் சிலிண்டர் விலை 200 முதல் 300 வரை ஏறி உள்ளது.

சாதாரண மக்கள்

சாதாரண மக்கள்

அதநேரம் மானியம் ஒரு பக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சிக்கல் தான். கேஸ் சிலிண்டர் விலை விவகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசிடம் உள்ள விவகாரமாக உள்ளது. மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த விலையேற்றத்தால் மக்களுக்கு சுமை ஏறிக்கொண்டே இருக்கிறது என்பதை ஏன் மத்திய அரசு மறந்து போகிறது என்பது தெரியவில்லை. சாதாரண மக்களின் வாழ்வில் இருந்து மத்திய அரசு அந்நியப்பட்டு நிற்பதாகத்தான் இதை பார்க்க முடிகிறது. மக்களோடு மக்களாக இருப்பவர்களாக இருந்தால் சிரமங்கள் புரியும். ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் மூலம் மாநிலங்களுக்கு வரும் வருமானத்தை செஸ் என்ற வரி மூலம் குறைத்துவிட்டார்கள். இந்த வரியால் மத்திய அரசுக்கு தான் அதிக பணம் போகிறது. அந்த வருமானம் மூலம் மத்திய அரசால் சமாளிக்க முடியும். ஆனால் ஏழை மக்களிடம் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் விலை வைப்பது நியாமில்லை" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+