அண்ணா பல்கலையில்.. இப்படி நடப்பது முதல்முறை அல்ல.. இதற்கு முன்பே நடந்திருக்கிறது.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்.. இதற்கு முன்பே இதே போல அங்கே பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது மட்டுமே வெளியே தெரிய வந்துள்ளது என்று அங்கே படித்த முன்னாள் மாணவி ப்ரீத்தி ராமதாஸ் என்று குறிப்பிட்டு உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என்பதால் சொல்கிறேன்.. பல்கலைக்கழகத்திற்குள் இது பலமுறை நடந்திருக்கிறது என்று நம்புங்கள், அதிகாரப்பூர்வமாக இணையத்தில் முதல்முறையாக வெளியே வந்துள்ளது.. இதற்கு முன்பே அங்கே பல முறை இப்படி நடந்துள்ளது என்று அங்கே படித்த முன்னாள் மாணவி ப்ரீத்தி ராமதாஸ் என்று குறிப்பிட்டு உள்ளார்.

anna university

முன்னதாக அண்ணா பல்கலை பலாத்காரத்தில் கைது செய்யப்பட்ட பிரியாணிக்கடைக்காரர் ஞானசேகரன் குறித்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகார் சம்மந்தமாக. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக பலாத்காரம்: அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ISவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் εδίστησεις நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும், ​​அவருடன் "வேறு வழியாக" உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி அந்த நபர் துன்புறுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. . இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது..

இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மோசமான நிலை: தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

anna university

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; திமுக ஆட்சியில் பெண்கள் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு எனது கடும் கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+