சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. ரெட்அலர்ட் விடுத்தும், சென்னை மழை தாமதத்திற்கு இதுதான் காரணமா? வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன

சென்னைக்கு மழை தாமதத்திற்கு என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும், இன்று காலையில் எதிர்பார்த்த கனமழை பெய்யவில்லை.. இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    6 மாவட்டங்களுக்கு Red Alert! வெளுக்கப்போகுது மழை! | Oneindia Tamil

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும் உள்ளது..

    முல்லைப்பெரியாறு அணை 141 அடி - சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 806 ஏரிகள் நிரம்பின முல்லைப்பெரியாறு அணை 141 அடி - சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 806 ஏரிகள் நிரம்பின

     காற்றழுத்த தாழ்வு பகுதி

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    அதற்கேற்றபடி வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்துள்ளது.. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது... காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    ரெட்அலர்ட்

    ரெட்அலர்ட்

    அதேசமயம், இன்று காலையிலேயே சென்னைக்கு கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் ரெட்அலர்ட் விடுத்திருந்த நிலையில் அப்படி எதுவும் கனமழை சென்னையை தாக்கவில்லை.. சென்னையின் இந்த காலதாமதமான மழைக்கு காரணம் என்ன? சென்னைக்கு மழை இருக்கா? இல்லையா என்பது குறித்து சென்னை வெதர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

    காலதாமதம்

    காலதாமதம்

    அதன்படி, தென்கிழக்கு வங்ககடலில் உள்ள காற்றழுத்தம் தமிழக கடற்கரையை நோக்கி வந்தாகிவிட்டது... அது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.. அதனால் கண்டிப்பாக சென்னைக்கு கனமழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை.. அந்த கனமழைதான் இன்று காலையில் பெய்யக்கூடும் என்றார்கள்.. ஆனால், காலதாமதத்திற்கு காரணம், நகர்வு மிக குறைவாக இருக்கிறது..

     மேற்கு பக்கம்

    மேற்கு பக்கம்

    வடமேற்கைவிட, மேற்கு பக்கம் நகர்ந்து கொண்டு செல்கிறது.. பொதுவாக, வடமேற்கு பகுதிக்கு வந்தால்தான் சென்னைக்கு மழை பொழிவு ஏற்படும்.. ஆனால், தற்போது மேற்கு பக்கம் நகர்வதாலும், அந்த நகர்வும் மிக குறைவாக இருப்பதாலும்தான், சென்னை மழை தாமதமாகி வருகிறது என்கிறார்கள்.. இந்த காற்றழுத்தமானது தாழ்வு மண்டலமாக மாறுமா இல்லையா என்பதை வானிலை ஆய்வுமையம்தான் தெரிவிக்கும் என்று ஏற்கனவே தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The System movement is slow, moving more west than North west, Chennai Weather
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X