கொரோனா தடுப்பூசி சான்றுகளில் கூட விளம்பரம் தேடும் நாட்டில் ஸ்டாலின் விதிவிலக்கு..The Telegraph இதழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த இரு சம்பவங்களை தி டெலிகிராப் எனும் ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அன்று முதல் இன்று வரை அவரது செயல்பாடுகளில் மக்களுக்கு அதிருப்தியே இல்லை என சொல்லும் அளவுக்கு அவர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து முடிவு எடுக்கிறார் என மக்கள் பாராட்டுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் ஓட்டு போடாதவர்களுக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக இது உள்ளதாகவே மக்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டது.

பள்ளி திறந்ததும் மாணவர்கள்

பள்ளி திறந்ததும் மாணவர்கள்

அப்போது பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு கொடுக்கப்படவுள்ள 65 லட்சம் புத்தக பைகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் இருந்தன. இதை அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தெரிவித்தனர். அவரும் இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

அப்போது முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறுகையில் இந்த பைகளில் உள்ள படங்களை நீக்குவதற்கே குறைந்தபட்சம் 18 கோடியாகும். இந்த தொகை இருந்தால் அந்த காசை வேறு ஒரு நலத்திட்டத்திற்கு பயன்படுத்தலாம். எனவே எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம்பெற்ற பைகளையே மாணவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்றார்.

அனைத்து அதிகாரிகளும்

அனைத்து அதிகாரிகளும்

இதை கேட்ட அன்பில் மகேஷ் மட்டும் அல்ல அனைத்து அதிகாரிகளும் பூரிப்படைந்துவிட்டார்கள். இந்த தகவலை அன்பில் மகேஷ் சொன்னவுடன் தமிழக மக்கள் மனதில் ஸ்டாலின் மேலும் ஒரு படி மேலே போய்விட்டார் என்றே சொல்லலாம். கடந்த ஆட்சியில் ஒரு பள்ளி புத்தகத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு இருந்ததாகவும் அதை நீக்க 35 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

வேறு வளர்ச்சிக்கு திட்டத்திற்கு

வேறு வளர்ச்சிக்கு திட்டத்திற்கு

இந்த 35 கோடியை வேறு ஒரு வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தியிருந்திருக்கலாம் என்பதே சரியான முடிவாக இருக்கும். அந்த பாணியைத்தான் ஸ்டாலின் தற்போது கையாண்டுள்ளார். அது போல் தங்கள் முதல்வரை அக்கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டி பேசுவது ஒன்றும் தமிழக அரசியலில் புதியது அல்ல. அதிலும் பட்ஜெட் உரை, விவாதங்களிலும் முதல்வரை புகழ்ந்து பேசுவதில் போட்டா போட்டியே நடக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகளாக இப்படி ஒவ்வொரு முதல்வரையும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டித்தான் வந்தார்கள். அதன் பின்னர் மக்கள் பிரச்சினைகளை சுருக்கமாக சொல்ல நேரிட்டது. இந்த எழுதப்படாத விதியை ஸ்டாலின் மாற்றியுள்ளார்.

மீறினால் நடவடிக்கை

மீறினால் நடவடிக்கை

தன்னை புகழ்ந்து எந்த திமுக எம்எல்ஏவும் பேசக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிடைக்கும் நேரத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த இரு செயல்பாடுகளும் ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகும். இதைத்தான் தி டெலிகிராப் பாராட்டியுள்ளது.

வளர்ந்த விதம் அப்படி

வளர்ந்த விதம் அப்படி

இதுகுறித்து டெலிகிராப் செய்தி கூறுகையில் ஸ்டாலினுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. தன் புகைப்படத்தை எம்எல்ஏக்கள் தங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பதை கூட கருணாநிதி விரும்ப மாட்டார். அவர் வழியில் வந்த ஸ்டாலின் தற்போது தன்னை துதிபாடுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
    தமிழக முதல்வர்

    தமிழக முதல்வர்

    இன்றைய இந்திய அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் செய்த இரு காரியங்களை யாரும் கவனிக்கப்படாததும் புறந்தள்ளியதும் ஒன்றும் ஆச்சரியமளிக்கவில்லை. கொரோனா சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்ற சம்பவமும் பள்ளி பைகளில் அரசியல்வாதியின் புகைப்படம் பொறிப்பதும் நாட்டிற்கு பொருந்தாத செயலாகும். இது போல் கொரோனா சான்றிதழ்களில் மோடியின் புகைப்படம் இடம் பெற்றதால் வெளிநாட்டுக்கு பயணம் செய்த இந்தியர்களுக்கு அசவுகரியத்தைத்தான் கொடுத்தது. எனினும் மத்திய அரசு அதை கண்டுக் கொள்ளவே இல்லை என தனது செய்தியில் தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+