• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு சூழல்.. சென்னை அமெரிக்க துணை தூதரகம் சார்பில் பயிற்சி பட்டறை

|

சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பிரவா ஆதரவு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, "மாற்றுத்திறனாளிகளுக்கான (Disability-friendly) விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் மெய்நிகர் பயிற்சி பட்டறை நடத்தியுள்ளது.

டெல்லியை மையமாகக் கொண்ட பிரவா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தொழில்முறை பரிமாற்ற திட்டங்களின் இந்திய முன்னாள் மாணவர்கள் - சர்வதேச பார்வையாளர் தலைமைத்துவ திட்டம் (International Visitor Leadership Program- IVLP) அடிப்படையில் இந்தப் பட்டறை நடைபெற்றது.

யு.எஸ். பரிமாற்ற முன்னாள் மாணவரும், தி ஸ்பைனல் பவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜஸ்டின் ஜேசுதாஸ் மற்றும் வித்யா சாகர் சிறப்பு கல்வி மையம் குழந்தை பிசியோதெரபிஸ்ட் சிமி ஆகியோர்களால் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வளர்ப்பதற்காக இந்த பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

The US Consulate in Chennai conducted a virtual training workshop

இப்பட்டறையில், ​​அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் துறை ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இணைந்து, உள்ளடக்கிய விளையாட்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் (Inclusive sports ecosystem), செயல் திட்டங்களை மேம்படுத்துவதற்கான யுக்திகளை உருவாக்கினர்.

நிகழ்ச்சியின்போது, சென்னையில் உள்ள யு.எஸ். துணைத் தூதரகத்தின் கலாச்சார விவகார அதிகாரி மாலிக் பெர்கானா கூறுகையில், "உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கு சமமான பங்கீடு ஆகியவை நமது இரு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான முக்கியமான அம்சமாகும். மேலும் தற்போதுள்ள கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை( Disability rights) முன்னேற்றுவதற்கான பணியால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த "சம்பவம்".. ஏதோ இடிக்குதே!

ஜஸ்டின் ஜேசுதாஸ் பாராஸ்போர்ட்ஸ் (Parasports)இயக்கத்தின் வரலாறை பகிர்ந்து கொண்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற விளையாட்டு சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில், 30 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோருக்கு பொழுதுபோக்கிற்கோ அல்லது போட்டிக்காகவோ விளையாட்டைத் தொடரலாம் என்பது கூட தெரிவதில்லை. மேலும் மொத்த இந்தியாவுக்காக வாதிடுவதற்கும், மாற்றுத் திறனாளிகளை விளையாட்டு மூலம் மேம்படுத்துவதற்கும் தான் இங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

குழந்தை பிசியோதெரபிஸ்ட் சிமி டி.ஏ., பேசுகையில், தகவமைப்பு விளையாட்டுகளுக்கு (Adaptive sports) உதவும் சூழலை உருவாக்க போசியா (Boccia) மற்றும் தகவமைப்பு கிரிக்கெட் (Adaptive cricket) போன்ற விளையாட்டுகளின் தற்கால உதாரணங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறுகையில், "ஒரு உள்ளடக்கிய உலகத்தை உருவாக்க, அனைத்து தரப்பும் சமமாக பங்கேற்பதை உறுதி செய்கிறோம்" என்றார்.

 
 
 
English summary
The U.S. Consulate General in Chennai, in collaboration with non-profit organization Pravah, sponsored a virtual workshop titled “Creating Disability-Friendly Sports Ecosystems.” The workshop was led by New Delhi-based Pravah and Indian alumni of the U.S. Department of State’s professional exchange programs – International Visitor Leadership Program (IVLP) – and Global Sports Mentoring Program.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X