அவங்களே பாராட்டிட்டாங்களே! திமுக கூட்டணியில் சேரும் பாமக? சல்லி சல்லியாக நொறுங்கும் ‘தாமரை’ கணக்கு!
சென்னை : அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சுமூக உறவு இல்லாத நிலையில் திமுகவுடன் பாமக கூட்டணி சேரவே வாய்ப்பு அதிகம் எனவும், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எதிர்பாராத கூட்டணி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்கும் நிலையில் தற்போதைய பல மாநிலங்களில் பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் திமுகவுக்கு எதிராக பல இடங்களில் குறிப்பிட தகுந்த வெற்றி பெற்றது. பாமக பாஜக எம்எல்ஏக்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சட்டசபைக்குள் நுழைந்தனர் அந்த வகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என பாஜக விரும்புகிறது.

பாஜக தலைமை
கூடுதலாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வரவும் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொடராத நிலையில் மீண்டும் அக்கட்சியை கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தலைமை விரும்புகிறது. பாமகவை பொறுத்தவரை விழுப்புரம்,அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் வலுவாக இருக்கிறது.சட்டமன்றத் தேர்தலில் அச்சாரமாக நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார்.

திமுக கூட்டணி
அதே நேரத்தில் பாமக, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்பது குறித்த யூகங்கள் கடந்து சில நாட்களாகவே அரசியல் களத்தில் பல யூகங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் திமுகவுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டு சேருவார் எனவும் மறுபுறம் பாஜக தலைமையுடன் கூட்டு சேருவார் எனவும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேசிய அன்புமணி ராமதாஸ்,"கூட்டணி குறித்து நான் எங்கேயும் பேசவில்லை. அதற்குள் நீங்களே ஒரு கூட்டணி இருக்கா? இல்லையா? என்பதை போட்டு உள்ளீர்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் அமைப்போம் என்று தான் சொல்லி இருக்கிறேன்" என பேசி வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்த
பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தல் தான் அன்புமணியின் குறியாக இருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் என்ன முடிவு எடுப்பார் என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக யோசித்து வருகின்றன. ஒருவேளை தனித்துப் போட்டி என அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்தால் அது வட மாவட்டங்களில் அதிமுக பாஜகவுக்கு பின்னடைவாகவும், திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

மாண்டஸ் புயல்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாண்டஸ் புயல் பாதிப்புகளை திமுக அரசு சிறப்பாக கையாண்டது. விடிய விடிய மழை சூறாவளி புயலை சந்தித்த போதிலும் அடுத்த ஒரு நாளுக்குள்ளாகவே புயல் பாதிப்புகள் சரி செய்யப்பட்டன. இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக அரசை வெகுவாக புகழ்ந்தனர். இதை குறிப்பிட்டு பேசிய தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திமுக அரசு செயல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் நிறுவனரும் பாராட்டி இருக்கிறார்கள் பாருங்கள் என இன்று சென்னையில் பேசினார்.

எதிர்பாராத கூட்டணி
இதையடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பாமக கூட்டணி நிச்சயம் அமையும் எனவும் அதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக திமுக அரசை பாமக தரப்பு நிர்வாகிகள் கடுமையாக விமர்சிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும் ஆலோசனை கூறி வருகின்றனர். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சுமூக உறவு இல்லாத நிலையில் திமுகவுடன் பாமக கூட்டணி சேரவே வாய்ப்பு அதிகம் எனவும் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக சில முன்னணி நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எதிர்பாராத கூட்டணி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications