சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணிக்கு "தோல்வி பயம்" வந்துவிட்டது.. வருமான வரி சோதனைக்கு திருமாவளவன் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை நடத்தப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறையினர் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல் அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுகின்றன.

திருமாவளவன்

திருமாவளவன்

இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:
அதிமுக அதன் கூட்டணியினர் எவ்வளவு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

 10 வருடங்கள்

10 வருடங்கள்

ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இது அநாகரிகமான நடவடிக்கை. மோசமான நடவடிக்கை

பயந்து விட்டார்கள்

பயந்து விட்டார்கள்

அதிமுகவும், பாஜகவும் தேர்தல் தோல்வி பயத்தில் திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதும் இப்படியான ஒரு நெருக்கடிதான்.

பயப்படமாட்டோம்

பயப்படமாட்டோம்

இந்த அச்சுறுத்தலுக்கு திமுகவும், திமுக கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் பணியாது. இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் திமுகவின் பணிகள் பின்தங்கிவிடும் என்று நினைக்க வேண்டாம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இந்த ஐடி ரெய்டை கண்டிக்கிறேன். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

English summary
VCK chief Thirumavalavan has accused the government of conducting an income tax raid targeting opposition leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X