தமிழ்நாடு இலச்சினை இல்லைனா.. ஆளுநருக்கு தகுதியே இல்ல! ஊருக்குப் போங்க.. கொந்தளித்த திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எதிர்பார்த்தது போலவே தமிழ்நாடு சட்டசபையில் நேற்று அரங்கேறிய நிகழ்வுகள் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எல்லா விவகாரங்களிலும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.

குறிப்பாக அவர் பதவியேற்றதிலிருந்தே திமுகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழகம் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை ஆளுநர் புறம் தள்ளிவிட்டு பாஜக தலைவர் போல செயல்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

சட்டசபை கூட்டத் தொடர்

சட்டசபை கூட்டத் தொடர்

அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா, கூட்டுறவு சங்கங்கள் மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும் இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது. அது மட்டுமல்லாமல் துணைவேந்தர் விவகாரம், பல்கலைக்கழக விழாக்களில் சனாதானம், திருவள்ளுவர், தமிழ் மொழி குறித்து ஆளுநரின் மாறுபட்ட கருத்துக்கள் பிரிவினை வாதத்தை தூண்டுவது போலவும் பாஜக அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி கலவரத்தை உண்டாக்கும் சூழல் இருப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன. ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது.

பரபரப்புகள்

பரபரப்புகள்

இதற்கிடையே 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

புகார்

புகார்

ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சபை மாண்பை ஆளுநர் புறக்கணித்ததாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்சி வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படவுள்ள பொங்கல் விழாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அழைப்பில் "தமிழக ஆளுநர்" என்று இருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் புறக்கணிப்பட்டதோடு, மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் "தமிழ்நாடு ஆளுநர்" என்றும், தமிழக அரசின் சின்னமும் இருந்தது. தற்போது இவை மாறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன்

திருமாவளவன்

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சட்டமன்றத்தில் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து உடனடி எதிர்வினையாற்றிய முதலமைச்சரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு செய்யவில்லை, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்துள்ளார்.

தகுதியற்றவராகிறார்

தகுதியற்றவராகிறார்

சங் பரிவார்களின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களில் ஒன்று. நாகலாந்தின் கவர்னராக இருந்தவர் ஆர்.என்.ரவி. அவை மரபுகள் என்னவென்று அவருக்கு தெரியும். முன் அனுபவம் உள்ளவர் இவ்வாறு செய்வது, உள்நோக்கத்துடன் திட்டமிட்ட ஒன்று. அதனை அனுமதிக்க முடியாது. முதலமைச்சருக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம். வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது. அரசின் இலச்சினை, தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார் என்றால் ஆளுநராக இருக்க தகுதியற்றவராகிறார். என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+