அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள்! திருமா பயிலகம் மூலம் திருமாவளவன் செய்யும் நல்ல காரியம்!
சென்னை: TNPSC- CCSE- Gr(II-Mains) தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை வரும் சனிக்கிழமை முதல் கட்டணமின்றி தொடங்குகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
தாம் நடத்தி வரும் திருமா பயிலகம் மூலம் கட்டணமின்றி வழங்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் அடையுமாறு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
''சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்' மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 03.12.2022 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு TNPSC- CCSE- Gr(II-Mains) தேர்விற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும், பயிற்சி வகுப்புகள் தேர்வு மற்றும் கலந்துரையாடல் (TEST and Discussion) முறையில் நடைபெற இருக்கிறது. தொலைதூர போட்டியாளர்கள் பயனுறும் வகையில் இணையவழி பயிற்சி வகுப்புகளும் நடைபெற இருக்கிறது.
விசிகவில் சனாதனம் இல்லை.. வெடித்த பெண் நிர்வாகி.. மைக்கை பிடித்து திருமாவளவன் சொன்னது என்ன?
இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத்தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
சென்னை தொடர்புக்கு:தொடர்புக்கு 8610392275, 9042991182
மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.