கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாஜக! மறைமுகமாக துணை போகும் விஜய்! திருமாவளவன் சரமாரி அட்டாக்!
சென்னை: திருச்சியில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த விஜய், திடீரென தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு நடந்து பிராரத்தனை செய்திருந்தார். இது தொடர்பான வீடியோ பரவலாக கவனம் பெற்றிருந்த நிலையில்.. விஜய், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருக்கும் பாஜகவை தூக்கி சுமக்கிறார் என திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
தன்னை சிறுபான்மையினரின் பிரதிநிதியாக விஜய் காட்டிக்கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், திருமாவளவனின் குற்றச்சாட்டு விவாதமாகியிருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "கிறிஸ்தவர்களுக்கு எதிரான, தேவாலயங்களை இடிக்கிற கட்சியாக பாஜக இருக்கிறது. வெறுப்பை பரப்பி, மதவெறி அரசியல் செய்யும் கட்சியாக பாஜக இருக்கிறது. இப்பேற்பட்ட கட்சியை தோளில் தூக்கி வளர்க்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. அந்த கட்சிக்கு மறைமுகமாக துணைபோகிறவர்தான் விஜய்" என்று விமர்சித்திருக்கிறார்.
விஜய்யின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் ஏற்கெனவே விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், திருமாவளவனின் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றிருக்கிறது.
சிறுபான்மையினர் பிரச்சனை vs விஜய்
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், கிறிஸ்துமஸை கொண்டாடிய சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் விஜய், இந்த சம்பவங்களை கண்டித்து போராட்டங்களை நடத்தாதது ஏன்? அப்படிப்பட்டவர், தற்போது சர்ச்சில் முட்டி போட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்திருப்பது, வெறும் வாக்கு வங்கி அரசியல்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், திருமாவளனின் குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் கூறியுள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications