சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஆட்சியை கலைக்க திருமாவளவன் உள்ளடி வேலை..! பற்ற வைக்கும் பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின், நட்புக் கட்சியா? எதிரிக்கட்சியா? தனிக் கொடி, தமிழர் இறையாண்மை இதெல்லாம் கம்பி எண்ண, களி சாப்பிட முதல் படி, ஸ்டாலின் ஆட்சியை கலைக்காம விட மாட்டாரோ திருமாவளவன் என்று கேள்வி எழுப்பியுள்ளார், தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள் என்பதை குறிப்பிட்டு, இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நவம்பர் 1ம் தேதியை தமிழர் இறையாண்மை நாள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இனவெறி.. மன்னிப்பு கேட்ட குயின்டன் டி காக்! முழங்காலிட சம்மதம்.. எங்க சித்தி கறுப்பினம் என விளக்கம் இனவெறி.. மன்னிப்பு கேட்ட குயின்டன் டி காக்! முழங்காலிட சம்மதம்.. எங்க சித்தி கறுப்பினம் என விளக்கம்

 பாஜக பொருளாளர் சேகர் விமர்சனம்

பாஜக பொருளாளர் சேகர் விமர்சனம்

இந்த நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் நட்புக் கட்சியா? எதிரிக்கட்சியா? என்று கேட்டுள்ளார் தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், தனிக் கொடி, தமிழர் இறையாண்மை இதெல்லாம் கம்பி எண்ண, களி சாப்பிட முதல் படி, ஸ்டாலின் ஆட்சியை கலைக்காம விட மாட்டாரோ திருமாவளவன், என்று வினவியுள்ளார்.

கர்நாடகா கொண்டாட்டம்

கர்நாடகா கொண்டாட்டம்

இவ்வாறான கோரிக்கைகளை எழுப்புவது தேச விரோதம் என்ற அர்த்தத்தில் சேகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம், நவம்பர் 1ம் தேதியை கர்நாடகாவின் பிறந்த நாளாக அந்த மாநிலம் கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்திற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் கொடி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, மதசார்பற்ற ஜனதா தளம் மட்டுமல்ல, தற்போது ஆண்டு வரும் பாஜக கட்சி ஆட்சியில் கூட மாநில நாளாக நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

தமிழ்நாடு பெயர் மாற்றம்

இது ஒரு பக்கம் என்றால் கர்நாடகா போன்ற மாநிலங்கள், தமிழகத்தில் இருந்து பிரிந்து சென்றன. எனவே அவை கொண்டாடுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நம்மிடமிருந்து திராவிட மாநிலங்கள் தனியாக பிரிந்து சென்றதை நாம் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். அதற்கு பதிலாக மதராஸ் மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்ட தினத்தை நாம் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்கள் பலரால் முன்வைக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

தனிக்குடித்தனம் சென்றதை மருமகள்கள் வேண்டுமானால் கொண்டாடுவார்கள். ஆனால் குடும்பத்தில் தாய் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு அது எப்படி கொண்டாட்ட நாளாக இருக்க முடியும் என்ற கேள்வியை முன்வைக்கும் நெட்டிசந்கள், மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் நமக்கு கொண்டாட்ட தினம் ஏதும் கிடையாது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள்தான் கொண்டாட்ட தினம் என்கிறார்கள்.

English summary
Is Viduthalai Chiruthaigal Katchi, an ally of the DMK? Opposition? Unique flag, Tamil sovereignty speaches by Thol.Thirumavalavan will lead to topple MK Stalin government, says BJP State Treasurer S.R.Sekhar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X