விசிகவில் நடந்த மோதல்.. வாரியத் தலைவர் பதவியே வேண்டாம்.. ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்ன திருமாவளவன்!
சென்னை: தவெக அளிக்க முன் வந்த ஒரு வாரியத் தலைவர் பதவி காரணமாக, விசிகவில் மிகப்பெரிய மோதல் வெடித்திருக்கிறது. இதனை பொறுமையாக கவனித்து வந்த திருமாவளவன், ஒரு கட்டத்தில் வாரியத் தலைவர் பதவியே எங்கள் கட்சிக்கு வேண்டாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாக கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
தவெக ஆட்சிமைக்க ஆதரவு அளித்த விசிக, பின்னர் அமைச்சரவையில் இணைந்து கொண்டது. விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். விசிக முதல்முறையாக கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருப்பதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். இதன் காரணமாகவே விசிக, தவெக உடனான கூட்டணியில் இணைந்து கொண்டது.

தற்போது அதிகாரப்பூர்வமாக தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே விசிகவின் 2ஆம் கட்டத் தலைவர்களுக்கு இடையில் மிகப்பெரிய மோதல் வெடித்திருக்கிறது. அதாவது அமைச்சர் பதவியுடன் சேர்த்து ஒரு வாரியத் தலைவர் பதவி கொடுப்பதாக விசிகவிடம் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அண்மையில் தாட்கோ வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது விசிகவில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருவரின் பெயரை கூறி கைகாட்டி இருக்கிறார். மறுபக்கம் அமைச்சர் வன்னி அரசு தரப்பில் ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனும் சிந்தனைச் செல்வன் பெயரை கூறியுள்ளார்.
இதனால் வன்னி அரசு மற்றும் சிந்தனை செல்வன் இடையில் மோதல் வெடித்துள்ளது. வன்னி அரசு தரப்பில், ஏற்கனவே எம்எல்ஏ-வாக இருந்துவிட்டார். கட்சியிலும் முக்கியப் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஏன் வாரியத் தலைவர் பதவி என்று முனுமுனுக்கப்பட்டிருக்கிறது. இதனால் டென்ஷனான சிந்தனை செல்வன், எக்ஸ் பக்கத்தில் பல்வேறு சர்ச்சையான பதவுகளை வெளியிடத் தொடங்கினார்.
இதனை கவனித்து வந்த திருமாவளவன், எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவியே வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாக கூறி இருக்கிறார். இதனால் சிறுத்தைகள் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து கட்சியை சமாளிக்க முடியாமல் திருமாவளவன் திண்டாடி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
