"மாம்பழமாம் மாம்பழம்.." காலை உணவு திட்டத்தில் பாடிய மழலைகள்! கை தட்டி கொஞ்சிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்த போது "மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்" என்ற பாடலை மழலைகள் பாடியதும் விஜய் கை தட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

joseph vijay Chennai

பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் விரும்பினார்.

அந்த வகையில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

இந்த திட்டம் கடந்த 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முதல்வர், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றதால் அந்த திட்டமானது இன்று தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுடன் அமர்ந்து அவரும் சாப்பிட்டார். சாப்பிட்ட தட்டை தானே கொண்டு சென்றார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதால் அந்த இரு தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்றார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது மழலையர் வகுப்புக்குச் சென்ற போது மாணவர்கள், "மாம்பழமாம், மாம்பழம் மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம்" என ரைம்ஸை பாடினர். விஜய் கை தட்டி அவர்களை பாராட்டினார்.

இதையடுத்து பள்ளிக்கு வெளியே காத்திருந்த மக்களை பார்த்து கையசைத்தார். அவரை காண வந்த மாற்றுத்திறனாளி இளைஞரின் தலையில் கை வைத்து தடவி கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+