2001-ல் பொன்னையன்... 2021-ல் பழனிவேல் தியாகராஜன்... தமிழக நிதிநிலையின் 2-வது வெள்ளை அறிக்கை இது..!
சென்னை: தமிழகத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பொருளாதாரத்துறை வட்டாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கால அதிமுக ஆட்சியில் நிதி நிர்வாகம் எப்படி இருந்தது அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை வெள்ளை அறிக்கை மூலம் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இதனிடையே இதற்கு முன்பாக கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் நிதி நிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை அறிக்கை
அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் அறிக்கையிலும், பேட்டிகளிலும் தொடர்ந்து வினவி வருவதை பலரும் பார்த்தும், கேட்டிருக்கவும் கூடும். வெள்ளை அறிக்கை, வெள்ளை அறிக்கை என்கிறார்களே அப்படி அந்த அறிக்கையில் என்னதான் இடம்பெறும் என்று பலரும் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக அது குறித்து தேடவும் செய்திருக்கிறார்கள். சரி வெள்ளை அறிக்கை என்றால் என்ன அதில் என்னமாதிரியான தகவல்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆங்கிலேயர்
வெள்ளை அறிக்கை முறையை அறிமுகப்படுத்தியதே ஆங்கிலேயர்கள் தான். ஊடகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மூலம் வரும் வாய்மொழி தகவல்களை காட்டிலும் அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்படும் அறிக்கை தான் வெள்ளை அறிக்கை. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு வெளியிடப்படுவதால், இதனை மையமாகவோ அல்லது ஆதாரமாகவோ வைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் விவாதிக்க முடியும்.

வெள்ளை நிறம்
இந்த அறிக்கையின் முன் பக்கம் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. வெள்ளை அறிக்கை என்பது ரத்தின சுருக்கமாகவும், மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாகவும் தகவல்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். வெள்ளை அறிக்கையை போலவே பச்சை அறிக்கை, நீல அறிக்கை என வேறு சில அறிக்கை முறைகளும் நடைமுறையில் உள்ளன. ஆனால் இவைகள் வெளியிடுப்படுகிறதா என்பது கேள்விக் குறிதான்.

2-வது முறை
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை திமுக ஆட்சியில் வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கையாகும். இதற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தின் போது இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த புதிதில் இதேபோல் ஒரு வெள்ளை அறிக்கையை அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் மூலம் வெளியிட வைத்தார் ஜெயலலிதா.

மாநில வளர்ச்சி
1996-2001-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சி சரிந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அப்போதைய நிதி மந்திரி பொன்னையன். இந்நிலையில் இன்று தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியாளர்கள் நிர்வாகத் திறமையும் இல்லாமல் அரசியல் உறுதியும் இல்லாமல் செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
கொரோனா அறிக்கை
நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டதை போல், விரைவில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் தமிழக அரசு தரப்பில் வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒளிவுமறைவின்றி வெளிப்படையான நிர்வாக முறையை விரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கேற்றவாறு தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்கிறார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications