இழுத்தடிக்காதீங்க! கூட்டணி வேண்டாம்! பாஜகவிடம் சொல்லும் எடப்பாடி? இந்த வாரம் பெரிய ட்விஸ்ட் இருக்கே?
பாஜகவில் இருந்து இன்னும் சில தினங்களில் பல நிர்வாகிகள் வெளியேறுவார்கள், என்று சேஷாத்திரி கூறியுள்ளார்.
சென்னை: தெரிந்தோ தெரியாமலோ, எடப்பாடி அவர்கள், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை மறைமுகமாக கூற ஆரம்பித்து விட்டார் என்று வலதுசாரி அரசியல் ஆதரவாளர் ஸ்ரீராம் சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் தீவிரமாக செயலாற்றி வந்த அதன் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் அவரின் தலைமை குறித்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அறிக்கை
நிர்மல் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

என்ன சொன்னார்?
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார், என்று குறிப்பிட்டார்.

அடுத்த நிர்வாகி
இதையடுத்து பாஜக ஐடி விங் செயலாளர், திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனதயு போஸ்டில், கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம் ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார் தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார், தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்... (அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன் மாநில.பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு.. தன்னைவிட

மோசம்
அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை..அடுத்து
பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் அவருக்கு சின்ன பிரச்சினை வருது அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார்.. அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள் , மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு கோத்தா கொம்மா என்று போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்... பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல.. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது... இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான் அவன் உழைப்பு என்ன இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான் இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க..
பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்..

அமர் பிரசாத் ரெட்டி
இன்னொரு பக்கம் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை!அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டணி உடைக்கிறதா?
இதனால் எங்கே அதிமுக பாஜக கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் வலதுசாரி அரசியல் ஆதரவாளர் ஸ்ரீராம் சேஷாத்திரி இது தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அதில் அதிமுக - பாஜக கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், தெரிந்தோ தெரியாமலோ, எடப்பாடி அவர்கள், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை மறைமுகமாக கூற ஆரம்பித்து விட்டார். கடைசிநாள் வரை இழுத்து அடிக்காமல் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னரே பாஜகவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டுவிட்டார். தமிழக பாஜகவில் மிக முக்கிய மாற்றம் இந்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன், அதன் பிறகு ஒரு உத்வேகத்துடன் கட்சி இயங்க ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். இன்னும் சில தினங்கள் பல நிர்வாகிகள் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications