சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

45 வயதுக்கு மேற்பட்டோர் இரு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள தமிழக அரசு அறிவுரை

Google Oneindia Tamil News

சென்னை: இரு வாரங்களுக்குள் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Recommended Video

    மீண்டும் Lockdown? தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம் | Oneindia Tamil

    கொரோனா பரவல் குறித்து புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு அதை தடுக்க வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த் தொற்றைக் குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

    இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    கிருமிநாசினிகள் தெளித்தல்

    கிருமிநாசினிகள் தெளித்தல்

    இந்த பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவிபுரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவார்கள்.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும் அதனை முழுமையாக தடுக்கவும், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

    நெறிமுறைகள்

    நெறிமுறைகள்

    பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சி ஆணையர்

    மாநகராட்சி ஆணையர்

    அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அறிகுறி

    அறிகுறி

    நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைப்பிடித்து கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொள்கிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Government advises those who are above 45 years can get vaccine for coronavirus within 2 weeks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X