எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்.. போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு மனு - காரணம் இதுதான்!
சென்னை : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, அவருக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் ஏ.பி.மணிகண்டன டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று கூறப்படும் நிலையில், அவருக்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் தென் தமிழக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையிலேயே, அவருக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார். ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தென் மாவட்டங்களில் களமிறங்க இருக்கிறார்.

டிஜிபி அலுவலகத்தில் மனு
தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரான அவருக்கு சுற்றுப்பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

பாதுகாப்பு வழங்க வேண்டும்
அவர் அளித்துள்ள மனுவில், "அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஏன் பாதுகாப்பு கோரி மனு?
இத்தனை நாளாக எடப்பாடி பழனிசாமி வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசி வந்தாலும், தென் மாவட்டங்களுக்குச் சென்றால் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் எனக் கருதுகிறதாம் ஈபிஎஸ் தரப்பு. அதற்காகவே, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications