நான் கேட்டது நாயகன்.. ஆனா, அவர் கொடுத்தது thug life! கமலை விளாசும் நெட்டிசன்ஸ்! சின்மயி தான் ஹேப்பி
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆறுதல் அளிக்கும் விதமாக ஏஆர் ரஹ்மானின் இசை மட்டுமே நன்றாக இருப்பதாக கூறுகின்றனர் ட்விட்டரில் ரசிகர்கள். இந்த நிலையில் பெரும் விவாதத்திற்கு உள்ளான முத்த மழை பாடலின் சின்மயி வெர்ஷன் தக் லைஃப் ஆல்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
நாயகன், தளபதி, பம்பாய் உள்ளிட்ட படங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட இயக்குனர் மணிரத்னம். குறிப்பாக கமல்ஹாசன் உடன் முதல் முறையாக அவர் இணைந்து பணியாற்றிய நாயகன் திரைப்படம் தற்போது வரை பலரது ஃபேவரைட் ஆக இருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைகிறது என்று அறிவிப்பே கமல், மணிரத்னம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
கூடுதலாக சிம்புவும் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் படத்தில் இணைந்த நிலையில், ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா, முத்த மழை உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. வழக்கமான மணிரத்தினம் படம் போல் இருப்பதாக சில ரசிகர்கள் கூறினாலும், பெரும்பாலானோர் படம் சரியில்லை என நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.
ட்விட்டரை திறந்தாலே தக் லைஃப் திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் தான் இருக்கிறது. அதற்கு இந்தியன் -2 எவ்வளவோ பரவாயில்லை எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு சிலரோ படம் ஒருமுறை பார்க்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களின் கருத்து படம் நன்றாக இல்லை என்பதுதான். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சரியில்லை என்கின்றனர். மேலும் நாயகன் படத்தை கேட்டால் தக் லைஃப்படத்தை கொடுத்து வைத்திருக்கிறார் எனவும், செக்கச் சிவந்த வானம் 2 படத்தை போல இருப்பதாகவும் கூறுகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்புவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக படத்துக்கு நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் ஏஆர் ரஹ்மானின் இசை தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் முத்த மழை பாடலை சின்மயி பாடினார். உண்மையில் இந்த பாடலை தமிழில் பாடியவர் பாடகி தீ. அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாததால் அவருக்கு பதிலாக சின்மயி பாடினார். இதை அடுத்து தீ வர்ஷனை விட சின்மயி வெர்ஷன் தான் நன்றாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் ஒரு மோதலே எழுந்தது.
ஒரு சில விவகாரங்களால் சின்மயி தொடர்ந்து தமிழ் திரை உலகில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் முத்த மழை பாடல் மூலம் சின்மயி கம்பேக் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஒரு சிலர் பாடகி தீயை விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் படத்துக்கு பெரிய சப்போர்ட்டாக இந்த பாடல் இருக்கும் நிலையில் தக் லைஃப் படத்தின் ஆல்பத்தில் முத்தமழை சின்மயி வெர்சன் பத்தாவது பாடலாக இடம் பெற்றுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications