திருப்பூர் ரிதன்யா அப்படி சொல்லியும்.. ஆர்டிஓ அறிக்கை மாறியது ஏன்.. நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சென்னை: ரிதன்யா வரதட்சணை கொடுமை செய்யப்படவில்லை என்று ஆர்.டி.ஓ. அறிக்கையும், உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்று மருத்துவ அறிக்கையும் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் திருப்பூர் ரிதன்யாவே கடைசியாக தனக்கு நேர்ந்ததாக கூறிய விஷயங்கள் ஏன் ஏற்கப்படவில்லை என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான மூன்றரை மாதங்களிலேயே புதுமணப்பெண் ரிதன்யா காரில் சென்றபடி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில், தன்னுடைய கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக தனது தந்தைக்கு ரிதன்யா 'வாட்ஸ் அப்'பில் ஆடியோ அனுப்பியிருந்தார்.

ரிதன்யா குடும்பம்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலர் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ரிதன்யா விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையும், ஆர்டிஓ அறிக்கையும் தான் இந்த வழக்கில் முக்கியமானது என்பதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதேநேரம்இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்பது நீதிமன்றத்தில் மட்டுமே சமர்பிக்கப்படும் என்பதால் எதிர்பார்ப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
கவின் குடும்பம் கைது
இதனிடையே ரிதன்யா வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்திருக்கிறது
கவின் தரப்பு வாதம்
அப்போது, கவின்குமார் குடும்பத்தினர் தரப்பில் மூத்த வக்கீல் ஜான் சத்தியன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், "ரிதன்யாவுக்கும், கவின்குமாருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் வரதட்சணை கேட்கவே இல்லை. மருத்துவ அறிக்கையில் மட்டுமல்ல, காவல்துறை விசாரணையிலும் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
ரிதன்யா தந்தை தரப்பு வாதம்
ரிதன்யாவின் தந்தை தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில் "கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் ரிதன்யாவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்திருக்கிறார்கள். கொடுமை தொடர்ந்ததால், மனவேதனையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார். ரிதன்யாவின் முடிவுக்கு அவரது கணவர் உள்ளிட்டோர்தான் காரணம். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்.
காவல்துறை தரப்பு வாதம்
காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் எஸ்.சந்தோஷ், "ரிதன்ய வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று அறிக்கை அளித்திருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று முதல் கட்டமாக தெரியவந்திருக்கிறது தடய அறிவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் 2 வாரத்துக்குள் வந்துவிடும்" என்று கூறினார்
ரிதன்யா ஆடியோ நிராகரிப்பு
இந்த வழக்கு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் சில கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதன்படி, ரிதன்யாவே தனக்கு வரதட்சணை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறிய பின்னரும், ஏன் வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று ஆர்டிஓ அறிக்கை வந்தது என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் ரீதியாக துன்புறுத்தல் நடக்கவில்லை என்றும் அறிக்கை வந்தது என்று கேள்விகள் எழுப்புகிறார்கள்.
ஐஜி பொன் மாணிக்கவேல்
ஒரு பெண் தனது கடைசி நிமிடத்தில் கூறியவற்றை ஆதாரமாக அரசு தரப்பு எடுக்கவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ரிதன்யா வழக்கை பொறுத்தவரை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், எந்த கொம்பனாலும் இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை உடைக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆனாலும் அறிக்கைகள் மாறி வந்திருப்பதை கண்டு ரிதன்யாவின் பெற்றோர் தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
என்ன நடக்கும்
ஊடகங்களில் வரும் தகவல்கள், உணர்ச்சி வேகத்தில் எழும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெறாது என்று கூறும் சில வழக்கறிஞர்கள், உடல் ரீதியாக துன்புறுத்தல் நடந்தது என்றால் அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்க வேண்டும் என்றும், வரதட்சணை கொடுமை நடந்தது என்று சொன்னால்,அதற்கான ஆதாரங்களும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications