சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானத்தை அரசினர் தனி தீர்மானமாக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டது.

அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாக தீர்மானத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டத்திருத்தம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்யும். குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி, அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும், மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் கொண்டுவந்த சிஏஏ திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வதற்கு முன்பே எதிர்க்கட்சியான அதிமுகபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதே போல குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இருந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் கே.பி.முனுசாமி பேச முயற்சித்தார், தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதி அளிக்கவில்லை, இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.
எதிர்கட்சியினர் வெளிநடப்பு குறித்து பேசிய ஸ்டாலின், இதை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் துரைமுருகன், சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க தைரியமில்லாததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தீர்மானத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார். அத்துடன் அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார் . வெளிநடப்புக்கு வேறு நல்ல காரணங்கள் சொல்லலாம் போய் வாருங்கள் என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications