அன்று திமுக...இன்று அதிமுக ... சட்டசபை வெளிநடப்பு....ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரை தாக்கல் செய்யப்படும் போது அதனை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். கடந்த காலங்களில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த நிலையில்
சென்னை: தமிழத்தில் அதிமுக, திமுக என ஆட்சிகள் மாறினாலும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் காட்சிகள் மட்டும் மாறாமல் உள்ளது. சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து விட்டுத்தான் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபைக்கே வருவார்கள் போல. பட்ஜெட் உரை வாசிக்க ஆரம்பிக்கும் போதே முழக்கமிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த காலங்களில் எதிர்கட்சியாக இருந்த போது திமுக கையாண்ட அதே யுக்தியை அதிமுகவும் கையாளத் தொடங்கியுள்ளது.
Recommended Video
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மு.க ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு. இந்த தடவை தமிழக சட்டசபையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். அதன்பிறகு அவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் கேட்கவில்லை. இதற்கிடையே சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இருக்கையில் அமர வேண்டும். இன்று முதன் முதலாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை விவாதம் நடைபெறும். அன்றைய தினம் உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் திங்கட்கிழமை நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தருகிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
ஆனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் பேசினார். அவர் கையில் இருந்த குறிப்புகளை பார்த்து வாசித்தார்.
ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேச்சு கேட்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அதிமுக எம்.எல். ஏ.க்கள் அனைவரும் எழுந்து முழக்கமிட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதிமுகவினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சட்டசபையில் அதிமுகவினர் எழுப்பிய முழக்கத்திற்கு இடையே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது கடந்த பிப்ரவரி மாதம் இதே கலைவாணர் அரங்கத்தில் துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த திமுகவினர் கூச்சலிட்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சி துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கவே அப்போதய சபாநாயகர் அனுமதி மறுத்தார். திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டதோடு பின்னர் வெளிநடப்பு செய்தனர். அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணித்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்த போது 11 முறை ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரை வாசித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மட்டும் நிதியமைச்சராக பதவி வகித்த ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபை கூடும் போது முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிப்பார். ஆளுநர் உரையை பலமுறை புறக்கணித்து அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதே போல திமுக ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்த பின்னர் சட்டசபை நூற்றாண்டு விழாவும் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் நடைபெற்ற போது அந்த விழாவை அதிமுக புறக்கணித்தது. இன்றைய தினம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வாசிக்கும் முன்பாக அவையில் முழக்கமிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது. நாளைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் உரை மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதங்களில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்பார்களா? அல்லது புறக்கணித்து வெளிநடப்பு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் சட்டபையில் பட்ஜெட் உரை புறக்கணிப்பும், வெளிநடப்பு காட்சிகளும் மட்டும் மாறாமல் உள்ளது. வெளிநடப்பு செய்வதை விட மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபையில் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications