கேரள என்.சி.சி.யில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை.. இங்கு கம்யூனிஸ்டு பொங்காதது ஏன்? பாஜக பிரமுகர் ட்வீட்
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை
இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ''ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று அவர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.

'நாங்கள் காவி துண்டு அணிவோம்'
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், ''நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம்'' என்று கூறி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தேசிய மாணவர் படையில் அனுமதி மறுப்பு
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' தேசிய மாணவர் படையில் உள்ள இஸ்லாமிய பெண் மாணவிகள் 'ஹிஜாப்' அணிவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று குறிப்பிட்டு கடந்த எட்டு நாட்களுக்கு முன் அனுமதி மறுத்துள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசு.
Recommended Video

அலறுவது ஏன்?
அதன் உத்தரவில், "சீருடை என்பது' அனைவரும் ஒன்று' என்ற உடுப்பு நெறியை போதிக்கும் கண்ணியத்தை சீரழிக்கும் என்று மறுத்துள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் 'ஹிஜாப்' அணியும் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் 'குய்யோ முறையோ' என்று குரல் கொடுத்து, மத சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கப்படுவதாகவும், மத சுதந்திரத்தை நசுக்குவதாகவும் அலறுவது ஏன்? கேரளாவில் ஆட்சி இருப்பதால், அங்கு மதநல்லிணக்கத்தை பேணுபவர்கள், கர்நாடகாவில் ஆட்சி இல்லாததால் மத கலவரத்தை தூண்ட வெறி கொண்டு, சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயல்வது ஏன்?' என்று அவர் கூறியுள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications