ஸ்டாலினை புகழ்வதா? அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தது பாஜக
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பெசிய துணைத் தலைவர் அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று திருமண விழாவில் பங்கேற்று பேசிய அரசகுமார், ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். மேலும் ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலினும் அரசகுமாரை பாராட்டினார். ஏற்கனவே பாஜகவில் சிபி ராதாகிருஷ்ணன், ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார். தற்போது அரசகுமாரும் பேசியது அக்கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பாஜக தமிழக பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பதில் வரும் வரை அரசகுமார், கட்சி நிகழ்ச்சிகளிலும் ஊடக விவாதங்களிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!