ஆரம்பிச்சதுமே அதிமுக வெளிநடப்பு.. "வாக்குறுதிகளை படிப்படியா நிறைவேற்றுவோம்".. நம்பிக்கை தந்த பிடிஆர்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்
சென்னை: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக செயல்படுத்துவோம் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது..
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது...

தாக்கல்
தமிழ்நாட்டில் முதன் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது... இதனையடுத்து, சட்டப்பேரவையில் எல்லாமே கம்ப்யூட்டர் கணினி மயமாகியுள்ளன. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு இது முதல் பட்ஜெட் ஆகும்.. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதாலும் எதிர்பார்ப்புகள் கூடி உள்ளது..

நிதியமைச்சர்
தமது பட்ஜெட் உரையை துவங்கியதுமே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகழாரம் சூட்டினார்.. அத்துடன், "பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும் காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.என்ற திருக்குறளை சொல்லி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதி அமைச்சர்.

வெளிநடப்பு
ஆனால், அவர் ஆரம்பிக்கும்போதே, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தனர்.. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தங்களை பேச வாய்ப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு கூச்சலிட்டனர்.. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.. பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பேச அனுமதிக்கிறேன் என்று பிடிஆர் தெரிவித்ததால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

முன்னுரிமை
இதற்கு பிறகு பிடிஆர் பேசும்போது, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக செயல்படுத்துவோம் என்று முதல் அறிவிப்பாக தெரிவித்தார்.. தொடர்ந்து பிடிஆர் பேசும்போது, பதவியேற்ற போது 5 முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதல்வர் ஸ்டாலின்.. இதுவரை முதல்வரிடம் வழங்கப்பட்ட மனுக்களில் 2,29,216-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக செயல்படுத்துவோம் என்றார்.

நம்பிக்கை
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று சமீபத்தில் அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அத்துடன் தொடர்ந்து திமுகவை குற்றஞ்சாட்டி வரும் அதிமுகவுக்கு பதிலடி தரும்விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாகவும் பிடிஆர், தன் உரையில் இந்த முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications