பெரியார் டூ அம்பேத்கர்.. ஈவிகேஎஸ் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பெரியார், அம்பேத்கர், அண்ணா, திருவள்ளுவர், காமராசர் உள்ளிட்ட 9 பெரும் தலைவர்களின் பெயர்களில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளார்.
தமிழுக்காகவும் இலக்கியத்திற்காகவும் சமூகத்திற்காகவும் சேவை செய்து பெரும் தொண்டாற்றிய நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களின் பெயர்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராசர், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட 9 பெரும் தலைவர்களின் பெயர்களில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை கவுரவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மரியாதை
இன்று காலை 8:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர், அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன் கலந்துகொண்டனர்.

அரசு செய்தித் குறிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, " திருவள்ளுவர் திருநாளான தை 2ஆம் (16.01.2023) நாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்து உள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு காலை 8.30 மணிக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்கிறார்.

அம்பேத்கர் விருது
பெருந்தலைவர் காமராசர் விருது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருது திரு.வாலா வல்லவன் அவர்களுக்கும், திரு.வி.க. விருது எழுத்தாளர் நாமக்கல் திரு.பொ.வேல்சாமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் விருது
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திராவிடர் கழக துணைத் தலைவர்கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் விருது திரு.எஸ்.வி. ராஜதுரை மற்றும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications