வீட்டை மாற்றும் முதல்வர் விஜய்.. பொதிகை வளாகத்தில் இருந்து தலைமைச் செயலகம் எவ்வளவு தூரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலாங்கரை வீட்டில் இருந்து, ராஜா அண்ணாமலைபுரம் பகுதிக்கு முதலமைச்சர் விஜய் இடம்பெயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நீலாங்கரையில் இருந்து முதல்வர் விஜய் வருவதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், விரைவாக தலைமைச் செயலகம் செல்லும் வகையில் அருகிலேயே வர இருக்கிறாராம் முதல்வர் விஜய்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு ஜோசப் விஜய், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தை முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார் முதல்வர் விஜய். வெகுசில நேரங்களில் மட்டுமே அங்கு செல்கிறார்.

TN CM Vijay Likely to Move to RA puram How Far Is His New Residence From the Secretariat

நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் வருவது நீண்ட நேர பயணமாக உள்ளது. வரும் வழியில் பல இணைப்பு சாலைகள் உள்ளன. எனவே அந்த பகுதிகளை கடக்கும்போது, பாதுகாப்பு அளிப்பதற்காக சாலை போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டியதுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தன்னால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், எனவே தலைமைச் செயலகத்துக்கு அருகே தங்குவதற்கு விருப்பம் காட்டி வருகிறார் முதல்வர் விஜய். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் தங்கி இருக்கும் வீடுகள் அமைந்துள்ள ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், அரசு இல்லத்தை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தொல்காப்பிய பூங்காவுக்கு எதிரே உள்ள பொதிகை வளாகத்தில் உள்ள அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு வசித்த வீடு. தலைமைச் செயலகத்துக்கு உடனே சென்று வரும் வசதி இருப்பதாலும் அந்த வீட்டை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் இருந்து, தலைமைச் செயலகம் சுமார் 19 கி.மீ தொலைவு. அவர் செல்லும் வழியில் பல இணைப்புச் சாலைகள் உள்ளதால், அவர் செல்லும் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதுவே, ஆர்.ஏ.புரத்தில் அமைந்துள்ள பொதிகை வளாகத்திற்கு அவர் மாறினால், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு விரைவாகச் சென்றுவிடலாம். பொதிகை வளாகத்தில் இருந்து தலைமைச் செயலகம் சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ளது.

உயர் அதிகாரிகள், நீதிபதிகள் வசிக்கும் பகுதி என்பதால் பாதுகாப்பு மிகுந்ததாக உள்ளது. அங்கிருந்து, பசுமை வழிச்சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலையை அடைந்து தலைமைச் செயலகத்தை சில நிமிடங்களில் அடைந்து விடலாம். எனவே, இந்த இல்லத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியாக இருந்த பொதிகை வளாகத்தைப் புனரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தபிறகு, முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு, அதன்பிறகு அங்கு வருவது குறித்து உறுதி செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+